வியாழன், 22 ஆகஸ்ட், 2024

435 (969) தோற்றால் வரும் ஏமாற்றம்

  



       


               தோற்றால் வரும் ஏமாற்றம்  


எதிர்பார்ப்பின் பரிசு ஏமாற்றம்

எதிர்பார்க்காதவன் மகிழ்ச்சியாளன்

ஏமாற்றம் உயர்விற்குப் படிக்கட்டு

ஏற்றம் தரும் சுனாமி

நிலைகுலைக்கும்  முயற்சி இன்றேல்

மலையான இறைநம்பிக்கை கைத்தடி.

தொலையாத் துணிவு, பொறுமை, காலம்

கலைத்திடும் ஏமாற்றத்தை!  நம்பலாம்!


ஏமாற்றம், வஞ்சகம், மனக்கலக்கம்

ஏமாறாதோர் எவருள்ளார் புவியில்

ஊமாண்டியாய் (பூச்சாண்டி) ஊமைக் காயமாக்கும்

கோமா நிலைக்கும் தள்ளிடும்.

நினைப்பது நடக்காவிடில் ஏமாற்றம்

நினைப்பே இல்லாவிடில் சுயமாக 

வினைப்பயனாய் நடக்கட்டும்! இவ்வெண்ணம்

நனைப்பது எவரோ  சுகப்படுவார்.


ஏமாற்றுபவன் மாறிட ஏங்காதே!

ஏமாறும் நீ மாறிவிடு!

ஓமாக்கினியால் (வேள்வித்தீ) இதயத்தை உருக்காதே!

கோமானாகு! ஏமாற்றுவோனை மறந்திடு!

பற்றற்று வாழத் துறவியாகணும்

பற்று தானே இன்பவாழ்வு!

சுற்றிவரச் சார்ர்ந்திடாது மனம்போல

அற்புதமாய்  வாழு!  அடிமையாகாதே!

00

ஏமாற்றுவோன் மாற மாட்டான்

ஏமாற்றிப் பழகியவன் அவன்.

ஏமாற்றுதல் அவனுக்கு ஆனந்தம்!

ஏமாற்றமெனும் வஞ்சகத்தால் அடுத்தவனை

ஏமாளியாக்குதல்அவனுக்கு இன்பம்.

ஏமிலாந்துவோர்  உலகில் பலர்.

00


வேதா. இலங்காதிலகம் - டென்மார்க்  7-5-2021

00






           

செவ்வாய், 2 ஜூலை, 2024

432 (966) பணம் கொடு...எடு!

 



        



பணம் கொடு...எடு!


பணம் வரும் நாடு!
குணம் மாறுவது ஏன்!
மணம் மாறிய நிலையில்
பிணம் தானோ மனிதன்!
00
உணர்வு அறுந்த வாழ்வா!
உடையவன் போல் நடிப்பா!
ஊரிற்குத் தெரியும் உண்மையுரு
உதாரண வாழ்வு வாரிசுகளுக்கா!
00
உட்பகை உதிரத்தில் கலந்ததா!
உன்னத திறமை தலைப்பாரமா!
உன்மத்தம் தெளிந்து உருப்படு!
உன்முகம் தெளிவாகி உன்னதமாகும்!
00
பணம் உதவியது! பயனடைந்தாய்!
பங்கப்படவில்லை! பகிரங்கமாய் ஏற்றிடு!
பங்கிட்டதைத் தர வாரிசுகளும்
பொருந்தவில்லை! கொடுத்தவரிடம் எடுக்கட்டாம்!.


வேதா. இலங்காதிலகம் - தென்மார்க்- 1-7--2024





திங்கள், 24 ஜூன், 2024

431 -965 அலங்காரப் பதுமையோ அறிவுச் சுடரோ

 

அலங்காரப் பதுமையோ அறிவுச் சுடரோ! பெண்ணே நீ அலங்காரப் பதுமையல்ல - வேதாவின் வலைமுதலாவதில் 


எழுதிய   கவிதையை மாற்றி எழுதிய கவிதை இது.  வான்பதிக்காக எழுதியது. 

          



இதழாசிரியர்  கொக்குவில் கோபாலன். 



முதல் கவிதை இணைப்பு...இதோ...

20. அலங்காரப் பதுமையோ அறிவுச் சுடரோ! | வேதாவின் வலை.. (wordpress.com)







செவ்வாய், 18 ஜூன், 2024

430 - 964 ( நெஞ்சம் மகிழும் நிதம்)

 


              






நெஞ்சம் மகிழும் நிதம்


வஞ்சகமற்ற மனிதர்கள் பேசும்
கொஞ்சும் தமிழின் குழைவிலும்
மிஞ்சும்கலைகளோடு உலாவலிலும்
நெஞ்சம் மகிழும் நிதம்
00
மரம் கொத்தி இடம் தேடி
மரம் கொத்துவதாய் மனிதன்
மனம் கொத்தி இடம் தேடும்
இனமாயும் ரகமான மனிதன்.
00
வக்கிர மனிதர்கள்தேவைக்கு
உக்கிர வார்த்தைப் பதம்
கக்கும் நிலை மாறினால்
நெஞ்சம் மகிழும் நிதம்.
00
கொஞ்சும் தமிழ் குழைத்து
பஞ்சு மனதில் அனலாய்
நெஞ்செரிக்கும் வார்ததைக ளின்றேல்
நெஞ்சம் மகிழும் நிதம்.


கவித்தாமரை - வேதா. இலங்காதிலகம்.
தென்மார்க் - 18-6-2024






435 (969) தோற்றால் வரும் ஏமாற்றம்

                          தோற்றால் வரும் ஏமாற்றம்   எதிர்பார்ப்பின் பரிசு ஏமாற்றம் எதிர்பார்க்காதவன் மகிழ்ச்சியாளன் ஏமாற்றம் உயர்விற்குப் பட...