புதன், 30 டிசம்பர், 2020
321. (884) வலிமையாய் விரியட்டும் 2021
செவ்வாய், 29 டிசம்பர், 2020
320. (883) கிளி சாத்திரம்
கிளி சாத்திரம்
அன்பாலே பேசி அணைக்கலாம் உன்னை
வன்முறைக் கிளியோசியக் கைதி
சொன்னதைச் சொல்லும் கிளிப்பிள்ளை நீ
செவ்வாரமுடை சொக்கிடும் சொண்டுக்காரி
அலெக்சாண்டரீனா பரகீட் உய்தாக் கிளியாம்
அடர்ந்த காட்டில் வசிக்கும் நீளமானவளாம்
வழலையோ இரண்டாயிரம் ரூபாவாம் கோவை
வஉசி உயிரியல் பூங்காவில் காணலாமாம்
பச்சைக்கிளி பால்சோறு
கொச்சி மஞ்சள் கொஞ்சி விளையாட
அச்சா குழந்தைப் பாடல் வரிகள்
இச்சையாய் இசைந்து பாடுவாராம்.
17-5-2016
புதன், 23 டிசம்பர், 2020
319. (882) மீண்டும் வருவாரோ
மீண்டும் வருவாரோ
தீண்டும் துன்பங்களுக்காய் மனமுவந்து
ஆண்டவர் சிலுவையை மறுபடி சுமந்து
மீண்டும் சிலுவையில் அறைந்து நொந்து
தாண்டும் துன்பம் அவருக்கு வேண்டாம்.
தோண் டி மறுபடியதை அனுபவிக்க வேண்டாம்.
தோன்றாத் துணையாயவர் சாத்தானை (கோரோனாவை) அழிக்கட்டும்.
தூணெனும் பக்தி மனதுள் நிலைத்திட்டால்
நாணெனும் நம்பிக்கை மலையளவு உயர்ந்திட்டால்
பூணெனும் மனிதநேயம் மனதில் ஊன்றிட்டால்
மீண்டும் வருவாரோ இரட்சகர் பூமிக்கு!
நீண்டிடும் துன்பம் அவருக்கு வேண்டாம்
ஆண்டவர் அங்கிருந்தெமை ஆளுமை செய்யட்டும்
சீண்டும தீய பழக்கங்கள் துஞ்சும்
தொண்டு மனம், தோழமை நெஞ்சம்
கொண்ட வாழ்வினில் ஆண்டவர் மஞ்சம்!
மீண்டும் எதற்கவர் வர வேண்டும்!
தீப்பழக்கங்கள் இல்லாத் தோழமை மனதோர்
வாழ்வில் ஆண்டவனுள்ளார் மீண்டவர் வரமாட்டார்!
(பூணெனும் - ஆபரணம் எனும். )
இலண்டன் தமிழ் வானொலி வியாளன் கவிதை)
18-12.2004
திங்கள், 21 டிசம்பர், 2020
318. (881) நமக்கென்று நால்வர்
நமக்கென்று நால்வர்
அழுத்தும் விரலியக்க உலகில்
அனைத்தும் உடனடையும் உலகில்
சுமக்கின்ற பணப்பொதி தேன்.
நமக்கென்று நாலுபேர் ஏன்!
அடுப்புக்கு மூன்று கல்லு
அமைச்சிற்குச் சேவகர் குழு
மலரிற்கு ஒரு தண்டு
மனதிற்கு ஒரு பற்றுக்கோடு.
எமக்கென்ற இக வாழ்வில்
நிலைக்கின்ற சொந்தம் யார்!
சுமக்கின்ற நாலு பேரா
நமக்கென்று நாலு பேர்!
அன்பைப் பிழி! பண்பைத்தெளி!
அறிவை அளி! ஆதரவு உளி!
உனக்கென்று நால்வர் அல்ல
உலகில் நாற்பது பேர் உருவாவார்
29-5-2004
(இலண்டன் தமிழ்வானொலியில் ஒலிபரப்பானது.)
வியாழன், 10 டிசம்பர், 2020
317. (880) ஊடகம் - ஞானம் சஞ்சிகை - ராஐராஐசோழன்
செவ்வாய், 8 டிசம்பர், 2020
316, (879) ஊடகம் அவுஸ்திரேலிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம்// 'உன்னை நம்பு'
உன்னை நம்பு
தன்னை நம்பாதவன் தாழ்வது
தன்னாட்சியாம் பொதுவிதி! உச்சிச் சூரியனாகு
தன் நிழல் தனக்குள்ளாகாது
தன்னம்பிக்கை வாழ்வின் முதுகு நாண்.
சாதனை வித்தை ஊன்ற
தீதினை, சூதினை வெல்ல
வேதனை துடைத்தெறி! நீயே நீதிபதி!
நாதனை ஆரதனை செய்!
விதையை அழுகவிடுவது சந்தேகம்
விளையாட்டை ஆரம்பத்திலேயே தோற்கடிக்கும்!
வினைத் திறன் சிகரச்சுடர்
வித்தகக் கனவு, இலக்கோடு படியேறு!
நளபாகமான அசையாத நம்பிக்கை
நங்கூரமாகி மனிதனைக் கரையேற்றும்!.
பொங்கும் ஓயா அலையாய் விடாமுயற்சியைத்
தங்கவை உன்னோடு! தாழ்வுமனப்பான்மையோடும்!
சூதுடை சதுரங்கப் பொய்மையழித்து
சூடமாய் அறிவொளி விரித்து
பாடான எண்ணங்கள் மாற்றி உயர்!
நம்பு நஞ்சில்லா உலகு உன்கையில்!
23-10-2020
439 (983) தமிழன் மானம் அழிக்காதே!
தமிழன் மானம் அழிக்காதே! (இக் கவிதை அலைகள் இணையத் தளத்தில் 18-12-2012ல் பிரசுரமானது.) அழகிய கண்ணால் பார்த்திடு! அழகுடன்அர...
-
https://youtu.be/S9DOv8gB5Yo நிலாமுற்ற குழுமத்தின் டென்மார்க் கவியரங்கத்தில் பாடிய கவிதை . வழி மாறிய பயணங்கள் இல்லத்தரசியாக ...
-
கிறுக்கல் சித்திரங்கள். சரிவாய், நேராய், வரிவரியாய் கற்பனைகள் சரியிது என்று கிறுக்கும் கிறுக்கல்கள் சிரிக்கும் குழந்தை மனதி...
-
https://www.facebook.com/sownthary.sivananthan/videos/10158681251443984/ (வானொலி- அவுஸ்திரேலிய ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம்.) ...