கிராமத்துக் கிளிகள்
இயற்கை மாலைகளை அள்ளியணிந்து
இங்கித சுவாச ஆரோக்கியம்
இறைந்தது கிராமத்தின் உயிரோட்டம்.
உலகை வாழவைக்கும் கிராமத்துக்
கிளிகள் செதுக்கிய சிட்டுகள்
செருக்குடன் ஊறிய செங்கமலங்கள்.
0
சிலர் பின்கொய்யகச் சேலைச்
சிட்டுகள். ஓசத்திக் கொண்டையிட்டு
வெத்திலை சப்பிய செவத்தை
உதட்டோடு சிலுப்பிப் பேசுவாக.
குடத்தை இடுப்பிலமர்த்தி ஒய்யாரமா
கூட்டமா போவாக தண்ணியெடுக்க.
0
கூடையைத் தூக்கிக்கிட்டுப் புல்லறுக்கப்
போகையில வம்பு பண்ணுகிறவனை
வாயாடி வெட்டும் கிளிகள்.
மாமரத்துக் கிளிகளும் மச்சானோடு
பண்பாடு மராமத்துப் பண்ணும்
கிராமத்துக் கிளிகளும் சமம்தாங்க.
0
வேலைசெய்து உடலைக் கட்டாக்கி
வெச்சிருக்கிறா பாரு! உரலில்
மாவிடித்து உட்கார்ந்து மாவரித்து
உருட்டுக் கட்டையாட்டம் உருண்டுள்ளா.
கண்டாலே ஆசை பிறக்குமழகியவள்
காதலிக்க மனசு தோணுது.
0
மாரியம்மன் கோயில் ஆலமர
நிழலிலே மச்சானையும் சந்திப்பா மாலதி
ஒற்றையடிப் பாதையிலே ஒய்யாரநடையோடு
அன்றைய கிளி பாட்டியம்மா.
சுருக்குப் பையில் வெற்றிலை
பாக்கோடு பணமும் ஒளிந்திருக்கும்.
0
சின்ன உரலில் வெத்திலையிடித்துக்
கொடுத்தல் என்ன ஆனந்தம்!
நானும் ருசிக்கவென்றால் கொஞ்சமீயும்;
பாட்டியம்மா அன்றைய ஐஸ்வர்யாராய்.
ஓடியோடி உதவுமுள்ளத்தார் சமூக
உணர்வாளர் கிராமத்துக் கிளிகள்.
0
18-8-16