அப்பப்பா இது விந்தையப்பா
கேளப்பா பல விந்தையப்பா
புலம் பெயர்ந்த சந்தையிலப்பா
உயிருக்குப் பயந்து புலம் பெயர்ந்து
இங்கு பயிரிடுவது பணமப்பா
பசிதூக்கமின்றிப் பணம் பணமென்று
பைத்தியமாய் அலைவது விந்தையப்பா.
ஒருவன் சம்பளம் பெற்றப்பா
ஐந்து சீட்டுக்கட்டுவது விந்தையப்பா
உலக ராக்பெல்லர் ஆகவப்பா
பலருக்கு ஆசையிங்கு விந்தையப்பா.
மணிக்கட்டிலிருந்து முழங்கை வரை
மினுமினுக்கும் தங்க வளையல் விந்தையப்பா.
பழசுகள் மறந்து பவிசிலப்பா
நடக்கும் பரிதாபங்கள் விந்தையப்பா
சின்னஞ்சிறிசுகளின் அபார மூளை
இளசுகளுக்கு அதனிலும் மேலிணையற்ற
அறிவு விந்தையப்பா! இதனைச் செம்மையிட்டு
வளர்க்காத சில பெற்றோர் சொத்தையப்பா.
இளசுகளிற்கிடும் இறுகிய கட்டுப்பாடு ஆபத்தப்பா
தமிழ்மொழி கேளாது விழித்த வேளையில்
ஐந்து வானொலி, நான்கு தொலைக்காட்சி விந்தையப்பா
இவைகள் உயிர்வாழப் பெரும்பாடு சோகமப்பா
நிம்மதி கண்முன்னிருந்தும் தேடிப் புலம்பலப்பா
நிம்மதி தன்மதியப்பா! என்ன மதியொரு நிறைவற்ற மதியப்பா!
கணனி மவுசின் பவுசு மாபெரும் விந்தையப்பா!
கவிதை நீண்டு போச்சு இனி நிறுத்த வேண்டுமப்பா!.
13-2-2003.
(இலண்டன் ரைம் கவிதை நேரம்)
விந்தைதான்
பதிலளிநீக்கு