செவ்வாய், 3 மார்ச், 2020

263. (826 ) அது பாரும் பொற்காலம்.













அது பாரும் பொற்காலம்.

மொட்டு மலரான பட்டுக் குழந்தைக் காலம்.
சிட்டுக் குருவியாய்ச்  சிறகடித்த சிற்றாடைக் காலம்.
கட்டின்றி பெற்றோருடன் மகிழ்ந்த பண்டிகைக் காலம்.
விட்டுவிடாது கண்டு களித்து ரசித்த சுற்றலாக் காலம்.
ஒட்டுறவான தாய்மண் வாச இன்பக்காலம்.
எட்ட இருந்து ஏங்குகிறோம் அது பாரும் பொற்காலம்.

பெற்ற பிள்ளைகள் குழந்தைகளாகத் தவழ்ந்த காலம்.
கற்ற கல்வியின் பயனாய்க்  காய்கனிகள் பெறும் காலம்.
பெற்றவர் மனங்குளிரப் பிள்ளைகள்பெயர் பொறிக்கும் காலம்.
மற்றவரைக்  குறிவைக்கும் ஆயுதங்கள் அழியும் காலம்
வெற்றி பெற மனிதநேயம் துளிர்த்து மரமாகும் காலம்
கொற்றமிக தாய்நில  விடுதலையோடிவை பாரும் பொற்காலம்.

9-11-2004.
(இலண்டன் தமிழ் வானொலி வியாழன் கவிதை.







கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

435 (969) தோற்றால் வரும் ஏமாற்றம்

                          தோற்றால் வரும் ஏமாற்றம்   எதிர்பார்ப்பின் பரிசு ஏமாற்றம் எதிர்பார்க்காதவன் மகிழ்ச்சியாளன் ஏமாற்றம் உயர்விற்குப் பட...