உலகைப் புறந்தள்ளிச் சிகரம் ஏன்!....
0
தனியே கடதாசி வனத்தில்
இனிய எழுத்தழுத்தல் மட்டும்
கனியும் நயம் போல்
பனியாம் சுயநலக் குளிப்பு
0
தன்னிருப்பிடம் சூழல் அக்கறையின்றிப்
பின்னிடும் தவமோ மௌனம்!
புத்தகம் மட்டுமா முழுநேரமும்!
புதினம், வாழ்த்து புறக்கணிப்பேன்!
0
மயக்கும் வாழ்த்தும், கருத்தும்
சுயத்தைக் குளிர்வித்துக் குளிப்பாட்ட
தயவு காட்டுவதில்லை கருத்திட,
கயமையின்றிப் பிறருக்கு வாழ்த்திட
0
மன எண்ணங்களின் மாறுபாடு
சனங்களின் விசித்திரச் செயற்பாடு
கனமானது விளங்கிட முடியாதது
மனமுருகாதது, கலங்கும் அறிவு
ழ
மயக்கமெனும் பூட்டு இறுகிட
வியக்கும் துரோகங்கள் துணையாகிறது
நயமான நிகழ்காலமொரு வித்தை
பயமின்றி மனிதம் தொலைகிறது.
0
24-4-2020
பேச்சியம்மாள் ப்ரியா:- பயமின்றி மனிதம் தொலைகிறது தான் ம்மா...
பதிலளிநீக்குமனிதம் தொலைத்த மனிதனைக் கண்டு
இயற்கை சிரிக்கிறது இன்று...
24-4-2020
உண்மை தான் சகோதரி.. மிக மகிழ்ச்சி.
நீக்குநலம் பல நிறைக!
Active Now
பதிலளிநீக்குSubajini Sriranjan நல்ல நல்ல குணங்கள் தொலைந்து போகிறது
எந்தனைவிதமான மனிதர்கள் இவ்வுலகில்
இந்த இயற்கையும் சீற்றம் கொண்டுவிட்டது...
இனிய பா
24-4-2020
Vetha Langathilakam :- ஆம் நல்ல நட்பானவர்களுமே மாறி
நீக்குபுகழ்- பணம் - பெருந்தொடர்பு என...
எப்படி எப்படியோ மாறுகிறார்கள்.
ஆண்டவா!!!..