மனவலிமை அதிகமுள்ளவர்கள் பெண்களே
நெருப்பு, பெருங்காற்று, வெள்ளம் பேரபாயமாக
நகரும் பகலவன், நிலவு, நட்சத்திரங்கள்,
மேகம் அழகு ஆச்சரியமாக, மழையில்
விதைகளின் துளிர்ப்பு, நெருப்பால் மரங்களழிதல்
வியப்புயர்த்த, மானுடவுடல் மாற்றம் ஆச்சரியமாக்க
உருவாக்கும் திறனால் பெண்ணியற்கையினமாக உருவாகினாள்.
பெண்ணின் கருவுருவாதல் மாதாந்தர சுழற்சி,
தண்மையான முலையூட்டலும் இரகசியம் பொதிந்திருந்தது
அச்சம் நாணமுடைய மடந்தை மணமானதும்
உச்சமான புரட்டும் மாற்றமாகப் புகுந்தவீடு.
உடல், மனத்திட இல்லத்தரசி ஆகிறாள்.
திடமான நிர்வாகத்தில் சுயமாய் இயங்குகிறாள்.
பெண்ணேயுயிர் உருவாக்கத்தின் மூலம், கடவுளல்ல,
புண்ணிய இயற்கையின் அங்கம் பெண்ணென
அன்று சுமேரியர் நம்பினர் பெண்
தானே தன்னை வலுப்படுத்தி வாழ்கிறாள்.
பாரதிக்கொரு நிவேதிதா, அதியமானுக்கொரு ஒளவை
விவேகானந்தருக்கு ஒரு சாரதாதேவியாக வாழ்வில்
தாக்கங்கள் ஏற்படுத்தினர், பெண்கள் காற்றிலும்
கடுவேகமுடைய எண்ணங்களுடையவர்கள்.
19-5-2018
உண்மை
பதிலளிநீக்குmika nanry bro
நீக்குSubajini Sriranjan
பதிலளிநீக்குஅருமையான பா
2018
Vetha Langathilakam
அன்பம் மகிழ்வும் சுபா
2018
Subi Narendran:- பூப்போன்ற பெண்ணின் வலிமை என்னவென்று உணர்த்தும் அருமையான கவிதை. //பெண்கள் காற்றிலும் கடுவேகமுடைய எண்ணங்களுடையவர்கள். // உண்மையான வரிகள். வாழ்த்துக்கள்.
14-6-2018
Vetha Langathilakam
ஆழ்ந்த அன்பும் மகிழ்வும் சகோதரி...
சிறீ சிறீஸ்கந்தராசா அருமை அம்மா!! வாழ்த்துக்கள்!!
15-6-2018
Vetha Langathilakam
அன்பும் மகிழ்வும் சகோதரா.
முருகுவள்ளி அரசகுமார்
அருமை வாழ்த்துகள் சகோதரி
2018
Vetha Langathilakam
ஆழ்ந்த அன்பும் மகிழ்வும் சகோதரி..
Sivakumary Jeyasimman :- ஆணுக்கு பெண் நிகரில்லை என்று சொல்லும் போது..
உண்மை தான் பெண் அதற்கு மேல் உயர்ந்தவள் எனப் பதில் சொல்வதுண்டு
15-6-2018
Vetha Langathilakam
அன்பும் மகிழ்வும் Sivakumary..
Kavignar Thamizh Mugil :- அருமைம்மா
பெண்ணின்
பெருமையைப்
பேசுமோர்
பெண்ணினால்
கண்டகர் மாய்வரே காண்
( கண்டகர் - அரக்கர்)
நெஞ்சினிக்கும் நேயமுடன்
கவிஞர் தமிழ்முகில்
கும்பகோணம்
11-6-2018
Vetha Langathilakam
காலையில் தங்கள் கருத்துப் பார்த்தேன், அப்போது
பதிலிட நேரம் வரவில்லை .
மிக மகிழ்ச்சியும்
ஆழ்ந்த அன்பும் உறவே.
2019
Maniyin PaakkalManபாவலர்கள் தெரு. :- மீயுண்மை
20-6-2018
Vetha Langathilakam :- ஆழ்ந்த அன்புடன் மகிழ்வு உறவே