ஓளித்துக் கண்டுபிடித்தல்
பட்டுப் பாவாடைச் சிட்டு
வண்டு போல நிற்கும்
குண்டு மாம்பழம் முழித்துப்
பதுங்குகிறாள் சுவரின் பின்னால்.
தளிர் பிஞ்சுக் கால்களால்
ஒளித்துத் தேடிப் பிடிக்கும்
கண்ணாமூச்சி ஆட்டம்
எனக்கு நன்கு பிடிக்கும்.
அப்பா தான் முதலில்
என்னைக் கண்டு பிடிப்பார்.
வருகிறாரோ! கண்டுபிடித்திட்டேன் என்பாரோ!
என்னைத் தோளிலும் தூக்குவார்.
’’மாலை முழுதும் விளையாட்டு’’
பாரதித் தாத்தா சொன்னாராம்.
அண்ணா அம்மாவோடு விளையாடுவார்.
நான் அப்பா செல்லத்தோடு இன்று
20-8-2016
samme type another poem:- 3. கண்ணாமூச்சி. (495) – வேதாவின் வலை.2 (wordpress.com)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக