வெள்ளி, 15 நவம்பர், 2019

220. (789 ) அன்பின் தேடல் 14.11-19 குழந்தைகள் தினம்





குழந்தைகள் தினம்

பிள்ளைக் காதல் செம்மை.
கொள்ளையடிக்கும் தினமெம்மை.
கிள்ளை மொழி துள்ளி
 சொள்ளையின்றி நீராட்டும்.
அள்ளிப் பருகி ஆனந்திப்போம்

 (செம்மை - அழகு பெருமை. 
சொள்ளை – சொத்தை,  இழுக்கு, செயற்கேடு.)
14-11-2019






அன்பின் தேடல் 

ஊன்உயிராய் உலவிக் கலக்கும் 
தேன்மொழி மாந்தரும், இயற்கையில்
தேன் மாந்தும் வண்டுகளும்
ஒட்டி இணையும் உலக இயக்கம்
ஒட்டி உறவாடும் உன்னத அன்பு

தென்றலின் தடவலில் துய்க்கின்ற உலகம்
கன்றின் உரசலில் சிலிர்க்கின்ற தாய்மை
நீரின் தழுவலில் துளிர்க்கின்ற  பூஞ்செடி
அன்பின் ஆதரவிற்கு ஏங்கும் ஜீவஉயிர்கள்
இத்தேடலில் தானே உலக இயக்கம்
இவ்வாடலில் தானே பிரபஞ்ச மயக்கம்.

15.9.2002





1 கருத்து:

  1. 2nd poem comment.
    Active Now
    Ponniah Puthisigamany இக் கவிதை எழுதிய காலங்கள் மிக நீண்டவை.இது நல்ல கவிதை.இப்போது மாற்றங்களும் நிகழ்ந்திருக்கும்.
    15-11-2019

    vetha: aam unmai..

    பதிலளிநீக்கு

435 (969) தோற்றால் வரும் ஏமாற்றம்

                          தோற்றால் வரும் ஏமாற்றம்   எதிர்பார்ப்பின் பரிசு ஏமாற்றம் எதிர்பார்க்காதவன் மகிழ்ச்சியாளன் ஏமாற்றம் உயர்விற்குப் பட...