சனி, 11 ஜனவரி, 2020

239. (ஆன்மிகம் - 31 ) சுவாமி ஐயப்பன் (டென்மார்க் ஓகுஸ் ஐயப்பன் விழாவில் எனது உரை)












சுவாமி ஐயப்பன்  (டென்மார்க்   ஓகுஸ்   ஐயப்பன் விழாவில் எனது உரை)

சுவாமி ஐயப்பன் பற்றிய சில தகவல்களைக் கூற வந்துள்ளேன்.
கேரளநாட்டில் இரண்டு விடயங்கள் நடந்தது. 
பந்தளநாட்டு  மகாராஜாவிற்கு பிள்ளைகள் இல்லையென மனம் வருந்தினார்.
மகிஷி என்ற எருமைத் தலை அரக்கி ரிஷிகளைத் துன்புறுத்திவந்தாள்.
இந்த இரு பகுதியாருக்கும் சிவபெருமான் உதவி செய்ய எண்ணினார்.
விஷ்ணு மோகினியாக மாற சிவன் மோகினி மீது ஆசைப்பட  ஐயப்பன் பிறந்தார்.

பிறந்த குழந்தையைக் காட்டிலே ஒரு மரத்தின் கீழே விட்டு விட்டு சிவனும் விஷ்ணுவும்  சென்றுவிட்டனர். வேட்டைக்கு வந்தார் பந்தள மகாரஜா. குழந்தையின் அழுகுரல் கேட்டு  இறைவன் தனக்குத் தந்த குழந்தையென மகிழ்ந்து அரண்மனைக்கு எடுத்துச் சென்று வளர்த்தார்கள். 
ஓளி நிறைந்த முகமும் கழுத்தில் மணிமாலையுடன் பிள்ளை இருந்ததால் மணிகண்டன் என்று பெயரிட்டனர். மணிகண்டன் வந்த ராசி....மகாராணி   கர்ப்பமுற்றார் இன்னொரு ஆண் பிள்ளை பிறந்தது. 

சொந்தப் பிள்ளையிருக்க வந்த பிள்ளைக்கு அரசு எப்படி என்ற துர் போதனைகளால் 
மகாராணி தனக்கு வயிற்று வலி வந்தது என நடித்தார். புலிப்பால்  குடித்தால்   
 வயிற்றுவலி   தீரும் என்று யோசியரைக் கூற வைத்தாள்.
மணிகண்டனுக்கு இவை தெரியாதா!   மணிகண்டன் புலிப்பால் கொண்டு வர காடு சென்றார்.
வழியில் அரக்கி மகிஷி துன்பம் தந்து தடுத்தாள். அவளை வதம் செய்தார்.
மணிகண்டன் அவதாரம் இதற்காகவே நடந்தது. தேவர்கள் பூமாரி பொழிந்தனர்.

இந்திரனே புலியாகவும் தேவர்கள் புலிப்படையாகவும் அரண்மனை வந்தனர்.  மணிகண்டனைக் கண்டு தாயார் திடுக்கிட்டார்.  மன்னிப்புக் கேட்டார். புலிகளை,   திருப்பி அனுப்பமாறு கேட்டார்.
அவ்வாறே மணிகண்டன்   செய்தருளினார்.
தனது பிறப்பின் காரியம் முடிந்ததால் தான் 18 படிகளின் மேல் சபரி மலையில் தவம் செய்யப் போவதாககவும்  தன்னை வணங்க விரும்பினால் அங்கு வந்து தரிசிக்கவும் என்று கூறினார்.
ஒரு முறை பந்தள மகாராஜா மணிகண்டனைத் தரிசிக்க வந்த போது மணிகண்டன் தந்தை என்று எழுந்திட முயன்றார் இறைவனானவர் தனக்காக எழக் கூடாது என்று பந்தள மகாராஜா தனது சால்வையைத் தூக்கிப் போட்டார் . இது ஐயப்பன் காலைச் சுற்றி நின்றது

அதுவே சுவாமி எழும்புவது போன்று முழங்கால் கட்டிய ஒரு தோற்றத்தைத் தருகிறது. 
--------  
பாரதப் போர் நடந்தது 18 நாட்கள்.     இராமாயணப் போர் நடந்தது 18 மாதங்கள்.
தேவ அசுரப் போர் நடந்தது 18 ஆண்டுகள்.  இப்படி 18 என்ற எண்ணுக்கு சிறப்புகள் உண்டு.

சபரி மலை 18 படிகளும் தங்கத்தால் ஆனவை.
இங்குள்ள 18 படிகளும் விநாயகர்,  சிவன்,  பார்வதி,   முருகன்,   பிரம்மா, விஷ்ணு,  ரங்கநாதன்,    காளி,  எமன்,   சூரியன்,    சந்திரன்,   செவ்வாய்,   புதன்,    குரு,   சுக்கிரன்,    சனி ,  ராகு,    கேது என 18 தெய்வங்களாக விளங்குவதால்,   தலையில் இருமுடி வைத்திருப்பவர்கள் மட்டுமே 18 படி ஏறமுடியும்.  
'தத்வமஸி':-
பதினெட்டு படி ஏறியவுடன் பக்தர்களை வரவேற்பது கொடிமரம். சன்னிதான வாசலில் 'தத்வமஸி' என்ற வாசகம் எழுதப்பட்டுள்ளது 'நீ எதை நாடி வந்தாயோ அது நீயாகவே உள்ளாய்' என்பது இதன் பொருள். ''ஏ மனிதனே! தெய்வத்தை தேடி நீ இவ்வளவு தூரம் சிரமப்பட்டு வந்திருக்க வேண்டியதில்லை.
காடு மேடுகளைக் கடந்திருக்க வேண்டியதில்லை. உனக்குள்ளேயே நான் இருக்கிறேன். நான்,  இங்கிருந்து உன்னை எப்படி பாதுகாக்கிறேனோ,   அதுபோல் நீயும் உன்னைச் சார்ந்தவர்களை பாதுகாக்கும் வகையில் நடந்து கொள். அவர்களிடம்     நல்லதைப் பேசு,   நல்லதை செய்,    நன்மையே நாடு' என்பது இந்தச் 
 சொல்லுக்குள்    அடங்கியுள்ள    தத்துவம்.

18 படியிலும்,  18 வன தேவதைகள் குடி கொண்டிருக்கின்றனர். 18 தேவதைகளையும் படியில் ஆவாஹணம்  (ஆரத்தி)   செய்து அவர்களை பூஜிப்பது தான் படிபூஜை.
சபரிமலை 18 மலைகளால் சூழப்பட்ட புண்ணிய ஷேத்திரமாகும்.

புலன் ,  ஐந்து, பொறி  ஐந்து,  பிராணன்  ஐந்து,   மனம் ஒன்று,   புத்தி   ஒன்றுஇ,  ஆங்காரம்  ஒன்று, இவைகளைக் கடந்து ஐயப்பனை காண வேண்டும் என்ற கருத்தின்படி 18 படிகளும் அமைக்கப்பட்டுள்ளன.
ஐயப்பன் தன்னுடைய 18 கருவிகளை வைத்து 18 படிகளை உருவாக்கியதாக கூறப்படுகிறது. அவை வில், 
 வாள்,  வேல் கதை, அங்குசம்,  பரசு. பிந்திபாவம்,  பரிசை,  குந்தகம்,  ஈட்டி,  கைவாள்,   சுக்குமாந்தடி,   கடுத்திவை,   பாசம்,   சக்கரம்,   ஹலம்,   மழுக்,   முஸல ஆகிய 18 போர் கருவிகள் ஆகும். 

*  18 படிகளை 18 வகை தத்துவங்களை குறிப்பதாகவும் கூறுகிறார்கள்.

* மெய். வாய்,  கண்,  மூக்கு,   செவி,   சினம்,   காமம்,   பொய்,   களவு,   வஞ்சநெஞ்சம்,   சுயநலம்,   பிராமண,   சத்திரிய,   வைசிய,   சூத்ர,  தாமஸ,   ராஜஸ என்ற 18 வகை குணங்களை தாண்டினால் பகவான் ஐயப்பனை காணலாம் என்று கூறப்படுகிறது.

* கோயிலைச் சுற்றியுள்ள 18 மலை தெய்வங்கள் 18 படிகளாக, ஐயப்பன் சன்னதிக்கு முன்பாக இருப்பது மிகவும் விசேஷமானது. 

10-1-2020





9 கருத்துகள்:

  1. paramasivam . Ponnampalam:
    photo comment 11-1-2020
    Vetha Langathilakam:- மகிழ்ச்சி .வணக்கம்.
    தங்கள் விரல் நடனத்திற்கு என் வரிகளிளான இடுகை. படங்கள் சுகுமார் போட்டுள்ளார் .
    நான் பிறகு போடுவேன்...

    பதிலளிநீக்கு

  2. Gandhi Bala :- சிறப்பான செய்தி.
    11-1-2020
    Vetha Langathilakam :- அடர் அன்பு.
    மகிழ்ச்சி



    பதிலளிநீக்கு
  3. சிறீ சிறீஸ்கந்தராசா நல்ல தகவல் அம்மா!! வாழ்த்துக்கள்!! ஒரு விண்ணப்பம்... ஐயனார்... வீரபத்திரர்... வைரவர்... முனி... காளி... இவைதான் இரண்டாம் தரக் சைவசமயக் கடவுள்கள் என்று சிறியவயதிலிருந்து நாமறிவோம். அனால் திடீரென்று ஐயப்பன்... சைவ சமயத்தவர்களிடையே பிரசித்தம் ஆகின்றார். எல்லாக் கடவுகளினதும் வரலாறுகள் ஓரளவுக்கு சொல்லித்தந்த எமது பாட்டி இந்தக் கதையைத் தெரிந்திருக்கவில்லை. சிவனுக்கும் கிரிஷ்ணருக்கும் இடையில் பிறந்த ஐயப்பனைப் பற்றி அவர்கள் அறிந்திருக்கவில்லை என்பதே உண்மையாகும். இதுபற்றி (ஐயப்பன் சுவாமியைப் பற்றி ) எப்போது நீங்கள் அறிந்துகொண்டீர்கள்?? **************************************************************************** மிகவும் நன்றி அம்மா!! வாழ்த்துக்கள்!!
    11-1-2020

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இங்கு கூட்டுப் பிரார்த்தனை வெள்ளி தோறும்
      கலாச்சர குழு என்று செய்கிறார்கள்
      கடந்த வருடம் ஐயப்பன் விழா செய்தார்கள்.நடந்து முடிந்த போதே அறிந்தோம்.
      இந்த வருடம் கூட்டம் வைத்த போது அழைத்தார்கள்.
      சிறு உரை ஒன்று கொடுக்கும் படி கேட்டனர்.
      நிறைய வாசித்து பிடித்ததை எழுதினேன்.18 படிகளுக்கு
      இன்னும் விளக்கங்கள் உண்டு நான் மிக எளிதானதாகத்
      தொகுத்தேன். வாசிக்கும் போது தான் எனக்கும் தெரிந்தது.
      எனக்கு பக்தியா நம்பிக்கையா என்றால் எனக்குத் தெரியாது. இப்படி வாசித்துத் தொகுப்பது எனக்கு மிகப் பிடிக்கும்.

      நீக்கு
    2. சிறீ சிறீஸ்கந்தராசா :- மிகவும் நன்றி அம்மா!!! வாழ்த்துக்கள்!!
      12-1-2020

      நீக்கு
  4. அன்புடன் மிக மகிழ்ச்சி உறவே (கரந்தை ஜெயக்குமார்)

    பதிலளிநீக்கு
  5. Anand Maheswaran :- மிகவும் அருமை
    Vetha Langathilakam:- அன்புடன் மிக மகிழ்ச்சி உறவே
    Subi Narendran :- தெரியாத நிறைய தகவல்களோடு அருமையான பேச்சு. வாழ்த்துக்கள்.
    12-1-2020
    Vetha Langathilakam :- அன்புடன் மிக மகிழ்ச்சி உறவே Subi.

    பதிலளிநீக்கு
  6. Manjula Kulendranathan:- அருமை ரொம்ப பிடித்த விஷயம் சிறப்பான.செய்தி.வாழ்த்துக்கள் அக்கா
    12-1-2929
    Vetha Langathilakam :- பேரன்புடன் மிக மகிழ்ச்சி மஞ்சு

    பதிலளிநீக்கு

435 (969) தோற்றால் வரும் ஏமாற்றம்

                          தோற்றால் வரும் ஏமாற்றம்   எதிர்பார்ப்பின் பரிசு ஏமாற்றம் எதிர்பார்க்காதவன் மகிழ்ச்சியாளன் ஏமாற்றம் உயர்விற்குப் பட...