வியாழன், 27 பிப்ரவரி, 2020

253. (816 ) (ஊடகம் - செம்பருத்தி) - வேண்டாத மைகள்






வேண்டாத மைகள்

கனம் பண்ண வேண்டாக் கருமைகள்
தினம் புரளி பண்ணும் ஆமைகள்
மனிதன் உயர்ந்திட ஒவ்வாத சுமைகள்
மனிதன் அழித்திட வேண்டிய மைகள்.
அஞ்சாமைச் சால்வை அகவிதழ் அலங்காரம்.
ஆற்றாமை  அழிந்தமனம் பெரு மைதானம்.

இயலாமையின் இழப்பு  இமயமூலதனம்.
ஈயாமை,  ஈகை, ஈனமிகு  கசப்பு இனம்.
உட்பகைமை,  உலர்தல் உற்சாக  வேதனம்
உதவாமை உதிர்ந்திட உவக்கும் உள்மனம்
கல்லாமை கரைதல்  களிமிகு   பூவனம்.
கயமை அழிதல் அர்த்தமிகு   ஆதனம்

பொய்மை பொசுங்குதல் பொலிகின்ற பூரணம்.
பொறாமை பொன்றுதல் பேறுடை இலக்கணம்.
பேதமை பொய்த்தல் பீடுடை வெகுமானம்
குடியாமை குவலய தத்துவப் பயணம்.
சொற்பகைமை சேர்க்காது சொர்க்கவனம்.
இவ்வாமைகள் இறந்தால்   இகலோகம் நந்தவனம்.

10-11-2004
11-3-2003 ரிஆர்ரி தமிழ்அலை வானொலி
29-4-2003 இலண்டன் தமிழ் வானொலி
ஐப்பசி – கார்த்திகை 2004 அலேசியா செம்பருத்தி இதழ். பிரசுரமானது.


  






2 கருத்துகள்:

  1. Subi Narendran :- எத்தனை தீய ஆமைகள் எம்மிடத்தே. அருமையான கவிதை. வாழ்த்துக்கள்
    27-2-2020
    Vetha Langathilakam :- நிறைமை - கருத்து அருமை,
    இனிமை
    27-2-2020

    பதிலளிநீக்கு
  2. Kannadasan Subbiah :- மிகவும் அருமை சகோதரி
    29-2-2020
    Vetha Langathilakam :- அன்புடன் மகிழ்ச்சி சகோதரா.
    இது மலேசிய செம்பருத்தி இதழில்
    2004ல் வெளியானது.

    பதிலளிநீக்கு

435 (969) தோற்றால் வரும் ஏமாற்றம்

                          தோற்றால் வரும் ஏமாற்றம்   எதிர்பார்ப்பின் பரிசு ஏமாற்றம் எதிர்பார்க்காதவன் மகிழ்ச்சியாளன் ஏமாற்றம் உயர்விற்குப் பட...