சின்ன வயதுச் சில ஆசைகள்.
சங்கீதம் எனக்கென்றும் சர்க்கரைப் பொங்கல்
இங்கித ஆர்வம் இழைந்தது அங்கத்தில்
சங்கீதச் சூழலில் என்கீதம் வளர்ந்தது
சங்கம் அமைத்ததென் கௌரவ இதயத்தில்
பங்கமில்லா இசையைச் சபையில் பாடிடும்
மங்காத ஆவல் எரிந்தது சுடராக
நீங்காத ஆசையுடன் வரமாகக் காத்திருந்து
ஏங்கி ஓடுவேன் சனிக்கிழமைக்காய் ஆச்சி வீட்டிற்கு
பாட்டு வாத்தியார் மாமிமார் இருவருக்கு
வீட்டிலே பழக்குவார் கர்நாடக இசை
நாட்டமுடன் அருகிருந்து ஆர்வமாய்
கேட்டிருப்பேன் ஈர்மூன்று வயதில் இசையை
சினிமாப் பாடல்கள் ' சிவாயநம ' தான்
இனிமை வரிகளும் இதயத்தில் நிறைந்து
இசையோடு இதமாய் நானும் பாடுவேன்
மேசையில் தாளம் மாமியோடு நாமும்.
ஓசையெழும் கூட்டாக இரவின் அமைதியில்
ஆசையில் பாடுவோம் நானும் தம்பியும்.
வண்ணங்கள் எம் கரங்களில் வசியமாய்
கண்கள் பதிப்பதைக் கைகள் புனையும்
புன்னகையாய்த் தீட்டுவோம் பல ஓவியம்.
நுண்ணிய திறமையாம் எமது ஆர்வத்திற்கு
புன்னகையும் வாழ்த்துகளும் பெற்றவர் பரிசு.
பண்ணியவைகளைப் பயிற்றுவித்தேன் தொழிலிடத்தில்.
ஏண்ணங்கள் யாவும் தறி ஏறுவதில்லை
வண்ணச் சருகையாய் ஆவதுமில்லை
கண்கள் அதனால் மூடுவதுமில்லை
மண்ணில் அவைகள் புதைவதுமில்லை
புண்ணியமாகப் பயின்றனர் பாலர் நிலையத்தில்.
சங்கீத ஆசை என்றும் தனியே தனியே
மங்காது மனதிலே அலை அலையாய்.
பொங்கும் என்றும் அமைதியாய் ஆத்மீகமாய்.
30-1-2003. இலண்டன் ரைம் வியாழன் கவிதை
11-6-2007 தமிழ் அலை கவிதை பாடுவோமில்
அருமை
பதிலளிநீக்கு