கலைத் தமிழின் வித்தகம்
பரந்த உலகில் எம்
விரிந்த அறிவு முகிழ்ச்சியால்
சொரிந்த பவளமல்லிகையாய்
பிரிந்து வகை வகையாய்
புரிதலுக்கு விருந்தாயெம் நூல்கள்
00
அறிவுத் தேநீரில் கரையும்
அமுதத் தேனாக வரிகள்
அலைகடல் அணைக்கும் மணலாக
விலையற்ற ஓவியச் சொரூபமாக
கலைத் தமிழின் வித்தகம்
00
உயிர் நனைக்கும் பரிவு
உறவாய் உலவும் மந்திரமாய்
உன்னத வரிகள் இதயத்தில்
உலராத நடனமாய் அறிவு
உயிர் நினைக்கும் விருந்து.
30;-4-2022