புதன், 13 ஏப்ரல், 2022

379. (912) சுபகிருது தமிழ் புத்தாண்டு

 





2022 – 14 சித்திரை ... எல்லோருக்கும் புத்தாண்டு வாழ்த்துகள்!


சுபகிருது தமிழ் புத்தாண்டு


புதிய காற்று சுத்தம் தரும்

புதிய ஆடை மனிதருக்குப் பிடிக்கும்

புதிய அனுபவமும் புதுப்பாடம்

புதினம் புதுமை  புத்துணர்ச்சியே!

புதிதென இரண்டாயிரத்து இருபத்திரண்டு.

வுpதியான நற்பாதையோடு பிறக்கட்டும்.

00

நிர்மலமாய் பிறக்கட்டும் பல

அருத்தமுடை வெற்றிகள் குவிக்கட்டும்

அவலங்களின்றி  அமைதி பிறக்கட்டும்

அகம்பாவ   அகவிருள்  உலகழிந்து

அத்தனை முறையும் சிறப்புற

முத்தான புதுமைகளோடு வருவாய்.

00

சுபகிருது தமிழ் புத்தாண்டு

சுபமுடன் மலரட்டும்  இனிதாக.

சுபசோபனமாய் எண்ணப் பிரவாகம்

வண்ணப் பழந்தமிழ்ச் சொற்தொடராய்

திண்ணமாய்க் குவித்தல் என்னாசை

மண்ணிலே தமிழ் நிலைக்கட்டும்


கவிமணி  வேதா  இலங்காதிலகம் - டென்மார்க் - 13-4-2022


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

602 (1102) பெட்டகோ பட்டம்!

                நான் 1990 ல் இருந்து 1993 வரை படித்த செமினாறியக் கட்டிடம் இடித்து தொடர் மாடியாகக் கட்டி பலர் குடியிருக்கின்றனர். வாகனத்தில் ...