வியாழன், 28 ஆகஸ்ட், 2025

505 thadaagam

 


            




         https://www.facebook.com/photo/?fbid=1082718395126367&set=g.590342914432275



உலகம் தழுவிய மாபெரும் (பன்னாட்டு) கவிதை
போட்டி மார்ச்மாதம் 2018
போட்டி -100 வது மாதம்
போட்டிக்கவிதை எண்-10
தலைப்பு -கலவரம்
கலகம் பெருங்குழப்பம், மனக்கலக்கமானது
கலவரம் கட்டுக்குள் அடங்காதது.
கட்டற்ற மனதால் காட்டுத் தீயாகும்
கடுமையான மதப்போக்கு, அரசியலும்
கசப்பை மக்கள் மனதிலேற்றும்.
கடைத்தேற முடியாத வன்முறையும்
கிளப்பும், துன்பம் வளர்த்திடும்.
குரோதம் கொழுந்தவிட்டு எரியும்.
நாகரிகம் பொறுமையற்ற மனப்போக்கு
நாணும் நிலையால் கட்டுப்பாடறுகிறது
நாட்டையே குழப்பிடும் வதந்தியால்.
நாட்டும் ஒரு சிறு பொறியும்
நாரதர் கலகமாய்ப் பற்றியெரியும்.
நாசமாகி நாட்டினரை வருத்தும்.
நாமாக உருவாக்கும் நிலையிது.
நகரபாதுகாவலரும் கண்மூடித் துயில்வார்.
பெண்கள், பிள்ளைகள், முதியோரெனும்
கண்ணிற்குப் புலப்படாத வேறுபாடு.
மண்ணிலுள்ள அரச நீதிகளையும்
எண்ணிடாது வளர்க்கும் கொடுமைகள்.
எண்ணம் நிறைவேறியவர் இறுமாப்பில்
புண்ணான மனதாளரை நினைத்திடார்.
எண்ணத்தில் பகையுணர்வு எறிந்திட்டால்
வண்ணமிகு அன்புலகம் வாராதோ!
________________________
Vetha.Langathilakam Denmark.







602 (1102) பெட்டகோ பட்டம்!

                நான் 1990 ல் இருந்து 1993 வரை படித்த செமினாறியக் கட்டிடம் இடித்து தொடர் மாடியாகக் கட்டி பலர் குடியிருக்கின்றனர். வாகனத்தில் ...