வெள்ளி, 22 ஆகஸ்ட், 2025

502 (1044) தமிழ் மொழி - 1 - சீர்தமிழே நீயெம் சிறப்பு

  தமிழ் மொழி -47 கவிதைகள் வேதாவின் வலை -1லும்

மிழ் மொழி -33 வேதாவின்வலை  -2லுமாக  5-2-2025ல் 

மொத்தம் 80 கவிதைகளுடன் இது   

 1 வது கவிதையாக வலையேற்றுகிறேன்.

      



    


சீர்தமிழே நீயெம் சிறப்பு


சீர் தமிழின் சிறப்பிற்கு

ஏர்புக் கருவி எழுத்தாணி.

ஆர்வமுடை வாய்மொழியும் ஒன்று

ஈர்ப்புடைப் பயணம் தமிழ்.

மொழிப் போர் உணர்வோடு ஆட

அழியாத முதன்மை மொழி

இழிவற்ற சிறந்த மொழி

ஏழிலான நம் தமிழ்.

00

அழகு இனிமை இயற்கை

தமிழ் - ழ – கரம் உயர்வு

அமிழ்தானது எம்மொழியிலும் இல்லை.

தமிழ் ஒற்றெழுத்தாயும் பொருளுடைத்து.

தமிழில் இனங்கள்  மூன்றாம்

வல்லினம் மெல்லினம் இடையினம்.

முச்சங்கம் கண்டு வளர்ந்தது.

முல்லையாய்ச் செழித்த முத்தமிழ்.

00

மொழிகளின் தாய் தமிழ்

முப்பொழுதும் தித்திக்கும் தெள்ளமுது.

மணிமேகலை தொல்காப்பியம்  திருக்குறள்

முத்தொளாயிரம் குறுந்தொகை  பதிற்றுப்பத்து

தேவாரம் திருப்புகழ் நற்றிணை பலவாம்.

மாங்கனித்  தீஞ்சுவை மாதுளம் 

பலாச் சுவையை மறக்கடிக்கும் 

தமிழறிவியற் களஞ்சியங்கள் ஏராளம்.

00

கவிஅரசி  வேதா. இலங்காதிலகம்.  தென்மார்க்.  22-8-2025





    

1 கருத்து:

  1. Vetha Langathilakam
    எனது பெயருக்கு முன்பாக நான் போடும் பட்டங்கள்
    நானாக எனக்குக் கொடுத்தது அல்ல.
    இதன் விவரங்கள் அனைத்தும் எனது 7வது புத்தகமான
    சான்றிதழ்க்கவியதிகாரம் - 1 - எனும் நூலில் உள்ளது.
    முகநூல் கவிதைப் போட்டிகளில் கவி எழுதி பெற்ற விருதுகள்.
    விரைவில் சான்றிதழ்க் கவியதிகாரம் -2
    எட்டாவது நூலாக வருகிறது. ஜீவநதி வெளியீடு.
    22-8-2025
    Paramasivam Ponnampalam
    🙏🏼
    23.5-2025
    Vetha Langathilakam
    Natrajan Kandasamy
    கவிஞர் என்பது அவரவர் விரும்பும் இறைவன் தந்த வரம்
    மேன்மேலும் வாழ்வில் சிறக்க வாழத்தி மகிழ்கிறேன் தாயி.
    May be an image of text that says 'மாலை வாழ்க வளமுடன்'
    24-8-2025
    Vetha Langathilakam
    Natrajan Kandasamy மிக்க நன்றி மகிழ்ச்சி உறவே....
    வாழ்க வளமுடன்!!!!
    1d
    Reply
    Vetha Langathilakam
    காந்திமதி செல்வரத்தினம்
    ·
    சிறப்பு வரிகள்
    25-8-2025
    Vetha Langathilakam
    காந்திமதி செல்வரத்தினம் மிக்க நன்றி மகிழ்ச்சி சகோதரி
    25-8-2025
    Janaki Sreenivasulu
    High Five Praying Hands Sticker by imoji, GIF may contain transparent, emoji, hand, hands, high five, pray, want, blessed, need, good luck, prayers, praying hands, good luck today, blssd and #blssd
    25-8-25

    பதிலளிநீக்கு

568 (1068) sanrithal - (பெண்மை) யாதுமாகி நின்றவள் பெண்ணே!

                 (பெண்மை)    யாதுமாகி நின்றவள் பெண்ணே!   - ( தேன்தமிழ்க் கவிவனம். சர்வதேச மகளிர்தினச் சிறப்புப் பேட்டி.) 00 (குமைதலின்றி – ...