செவ்வாய், 7 ஜூலை, 2026

602 (1102) பெட்டகோ பட்டம்!

 

      



      நான் 1990 ல் இருந்து 1993 வரை படித்த செமினாறியக் கட்டிடம் இடித்து தொடர் மாடியாகக் கட்டி பலர் குடியிருக்கின்றனர். வாகனத்தில் போகும் போது இது நான் படித்த இடம் என்று சொன்னபடியே செல்வோம். தென்மார்க்கில் எனக்கு ஒரு அந்தஸ்து தந்த இடம்.

கல்விக்கு ஏது வயது! – பெட்டகோ பட்டம்!

00

வில்லங்கப் போர் நிலையால்

அல்லல் தீருமென தாய்நாடு

இல்லம் விட்டு(இலங்கை) தென்மார்க்

எல்லையுள் வந்தோம் அகதிகளாக(1987)

00

இந்த நாட்டு மொழியை (தேனிஸ்)

சொந்தமெனப் படித்தோம் முன்னேறினோம்.

நாற்பத்திமூன்று வயதில் செமினாறியம்

பாலர் பராமரிப்புக் கல்வியில்.

00

மூன்று வருடப் படிப்பிற்கு 

அனுமதிப் பத்திரம் கையில்

எல்லையில்லா மகிழ்வில் சிறகடிப்பு

தொல்லையுடன் முயற்சி ஏணியில்

00

1993ல் பெட்டகோ பட்டம் கையில்

முதல் இலங்கைத் தமிழிச்சியாக

கைகூடிய பெருமை சமூகத்தில்

கைப்பொருளான கல்வியுடன் கவிதையும்

00

நூலாக்கம் - வானொலியில் குரல்

நுண்ணறிவுடன் தொலைக்காட்சியிலும்

செய்தி வாசிப்பாய்க் காலம் நகர்ந்தது

கவிதைகளும் காற்றில் ஊடாடியது

00

பட்டம் பெற விசேட ஆடைத் 

திட்டம் தென்மார்க்கில் இல்லை.

திகைப்பானது இதை அறிந்திட

திண்ணம் நாம் பட்டதாரிகளே!

00

ஓய்வுநிலைப் பெட்டகோ - வேதா. இலங்காதிலகம்- தென்மார்க் - 6-7-2026



          



ஞாயிறு, 5 ஜூலை, 2026

601 (1101) Haikku - naanilu....

 



       



          Haiku

மீன் விழியின்
வலை விரிப்பில்
திருட மறந்தேன்.
--வேதா. இலங்காதிலகம். டென்மார்க். ---
1
மீன் விழி
வலை விரித்தது.
திருட மறந்தேன்.
--வேதா. இலங்காதிலகம். டென்மார்க். ---
19-1-2020
எழுதிய ஹைக்கூவின்
பிழை திருத்தவில்லை
பரிகாசம் புலமைக்கே
வேதா. இலங்காதிலகம் - டென்மார்க்.19-1-2020
------------------------------------------
முன்பு எழுதப்பட்டது.
தன்முனைக் கவிதை போட்டி 6-1-2020

எழுத்தின் ஆதாரம்
சிந்தனையின் பதிப்பு
சரித்திரத்தின் உயிர்நாடி
புத்தகம் மனதிற்கு மயிலிறகு
கவிமணி வேதா. இலங்காதிலகம்
. 6-1-2020
கணக்கற்ற உயிர்கள்
சொத்துக்கள் இழப்பு
முடியாத கேள்வி வருமா
எங்களுக்கான உலகம்!
வேதா. இலங்காதிலககம்
11-2-2020
posted today---5-7-2026




சனி, 4 ஜூலை, 2026

600 (1100) கல்விச் சிறப்பு.

 

       

        



 கல்விச் சிறப்பு.

00
கற்றோர்க்குச் சென்ற இடமெல்லாம் சிறப்பு
கல்வி அறிமுகமாவது விஐயதசமி அன்று
செல்வம் அறிவு குறியோடு செல்வது
கல்விக்கு அதிபதி சரசுவதி தேவி.
00
பொல்லாதவரும் அழிக்க முடியாத செல்வம்
இல்லாதவரும் வேண்டி ஏங்கும் செல்வம்.
தோண்டத் தோண்டப் பெருகும் கல்வி
ஆண்டு அனுபவிப்பவருக்கும் கல்வியொரு தகுதி.
00
மீண்டும் மீண்டும் வளர்த்தால் வளரும்.
கூண்டுக்குள் அடைத்தாலும் ஒளிரும் கல்வி.
கலையாது நிலைக்கும் செல்வம் யார்
குலைத்தாலும் உயரும் ஊன்றும் வேர்.
00
மலை போல் சுடரும் கல்வி.
மனிதனை மாமனிதன் ஆக்குமறிவுச் செல்வம்.
மின்சாரமாய் தன்சாரம் ஒளி தரும்.
சென்றவிடமெல்லாம் கல்வியால் சிறப்பு உயரும்.
00
கல்வி சமூகத்தின் கலங்கரை விளக்கு
சமுதாயப் பள்ளங்கள் நிரவுவான் கல்வியாளன்.
கல்வியாகக் கற்ற நீதிப்படி ஒழுகினால்
அநீதி மலியாது அவலம் குறையும்.
00
கரையற்றது. காலம் முழுதும் கற்கலாம்.
கரையாது - கொடுத்தாலும் எடுத்தாலும் உயரும்.
விற்றாலும் வெற்று மனிதனாகினாலும் போகாதது.
கற்றது கையளவு கல்லாதது உலகளவாம்.
00
நிகரற்ற அறிவு அனுபவம் ஆளுமை
ஆற்றலின் அடித்தளத் தொகுப்பே கல்வி.
நல்லிரு கண்கள் கணிதத்தோடு கல்வி.
கல்வி கரையில கற்பவர் நாட்சில.
00
நிலாச்சுடர் - வேதா. இலங்காதிலகம்-தென்மார்க்- 4-7-2026






602 (1102) பெட்டகோ பட்டம்!

                நான் 1990 ல் இருந்து 1993 வரை படித்த செமினாறியக் கட்டிடம் இடித்து தொடர் மாடியாகக் கட்டி பலர் குடியிருக்கின்றனர். வாகனத்தில் ...