வியாழன், 30 ஏப்ரல், 2026

582 (1082) Anchali....

 

   






    அஞ்சலி!....


அஞ்சலி செலுத்த விடுங்கள்!

சஞ்சலமான  குறுக்கீடு ஏன்!

அஞ்ஞான  மனிதராய்  மாற்றமேன்!

எஞ்சுதல் உலகில் எதுவாகும்!

எஞ்ஞான்றும் கருணையை  ஏந்துங்கள்.!

கஞ்சமாகாதீர்கள் அன்பை  அளிக்க

அஞ்சலி உங்களுக்காகும் போது

விஞ்சுதல் உங்கள் மௌனம் தானே!


கவியூற்று -வேதா. இலங்காதிலகம்-தென்மார்க்- 30-4-2026



        


செவ்வாய், 28 ஏப்ரல், 2026

581 (1081) மாண்புறு மானுடராகவின்றி எல்லாம் மாறிவிட்டது

 



     



       மாண்புறு மானுடராகவின்றி

எல்லாம் மாறிவிட்டது

00

ஆண்டுப் பிரகாரப் பதிவல்ல

ஆதியில் பின்பற்றிய பழக்கம்

இணைய -மின்னஞ்சல்- தொலைபேசி

இன்ஸ்ரா -வாட்ஸ் அப்- எக்ஸ்

இன்னும் பலப்பல! மக்களுக்கு

எதிலும் திருப்தி   இல்லையோ!

00

எதிலும்   நிலைப்பதுமில்லை  இணைவதுமில்லை

உதாசீனம் வேணுமென்று  செய்வதும்

உடல்  நலம்   இழந்தாலும்

குலம் மீறிய குணமாக

பலவீனமாய்  மௌனிப்பதும்

நிலம்  கடந்தும் நிலைமாறுகிறது.

00

மனித விதிமுறை விழுமியங்களோடு

வனிதமாக நடக்காது   சஞ்சலித்து

வில்லங்கமாகப் பச்சோந்தி மானுடராவது

வீணான பலவீன நிலையோ!

காயங்கள் கொடுக்கும் ஆட்சியால்

சாயங்கள்  வெளுப்பது நிலையோ!

00

கவிஞர் திலகம். வேதா. இலங்காதிலகம். தென்மார்க்.28-4-2026



     



ஞாயிறு, 26 ஏப்ரல், 2026

580 (1080) Anchaly gnanam...

 

    






  இன்று  26-4-2026 தமிழ் வான் அவையில் வாசித்தேன்.


(ஞானாசாரியன் - மெய்யறிவு புகட்டும் ஆசான்

ஞானநாயகன் - இறைவன்.

ஞானசரிதன் - ஞானநெறியில் ஒழுகுபவன்.

ஞானசுகம் - இறைவனோடு கலந்த பேரின்ப மகிழ்ச்சி.

ஞானப்புதல்வர்- மாணாக்கர்.)

00

ஞானசேகரன் ஞானசுகம் பெறட்டும்!

00

ஞானம் இதழும் தலைவரும்

ஞானாசாரியனாக இருந்ததும்

ஞானப் புதல்வராக நாமிருந்தோம்.

ஞானநாயகன் ஏனவரை அழைத்தான்!

ஞானசரீரம் அழிந்தாலும்

ஞானோதயத்தை வளர்ப்போம்.

00

மறைவு கேட்டுத் துயரடைந்தேன்.

கண்கள் பனிக்கத் திகைத்தேன்.

என் பல கவிதைகள் ஞானம்

இதழில் அரங்கேறியது மகிழ்ந்தேன்

ஞானசரிதன் ஞானசுகம் பெறட்டும்!

அவரது ஆத்மா  சாந்தி பெறட்டும்!

00

இலக்கிய சந்திப்பில் தென்மார்க்கில்

இனிய ஒருங்கிணைப்பு   2015ல்

முகநூலில் நிழல் படங்கள் காணலாம்.

இறைவனுக்கு நன்றி பொன் தருணத்திற்கு.

00

வேதா. இலங்காதிலகம்.தென்மார்க். 2026- 4-


     



வெள்ளி, 24 ஏப்ரல், 2026

579 (1079) அம்மா

 

 

    





     அம்மா

00


விருப்பு வெறுப்பற்ற கருப்பொருளாம் உன்

உருத்தான பாலைத் தந்து மெதுவாய்

கருத்தோடு தூங்க வைப்பாய்

அருமை அம்மா அம்மா

00

உன்னைப் பின்னும் வாழ்வின்

சின்ன மழலை நான்.

கண்ணும் கருத்தாய்க் கவனிக்கலாம்

எண்ணம் நல்லதாய் இயங்கட்டும்

00

நிலையில்லா வாழ்வில்

நிரந்தரத் துணையாய்

நிறைந்தாயே அம்மா

நிம்மதி   நீயே  அம்மா!

00

கவி வித்தகர்  வேதா. இலங்காதிலகம். தென்மார்க்-24-4-2026


       




ஞாயிறு, 19 ஏப்ரல், 2026

578 (1078) சான்றிதழ்க் கவிதை... குயில்களின் கூடாரம்

 


      



 சான்றிதழ்க் கவிதை...

குயில்களின் கூடாரம் - சிறப்புக் கவிதைத் தலைப்பு
அவள் பெயர் வலிமை
00
இவள் அழகான திண்மை வீராங்கனை
எவளையும் சுய ஆளுமையால் வென்றிடுவாள்
துவளுதல் இன்றிக் கடமை செய்வாள்
துணிந்த மகள் தான் வீட்டரசி!
துள்ளும் மனதால் கலை கலாச்சாரம்
துடிப்புடன் பழக்குவாள் தன் பிள்ளைகளுக்கு
துலாபாரமாய்த் தாங்கும் சாயாத சக்தியாள்
துர்க்கை அவள் பெயர் வலிமை!
துயரின்றிக் கண்ணகியாய் நீதி கேட்பாள்
துலக்கமுடன் வல்லினமாய் வாகை சூடுவாள்
00
வேதா. இலங்காதிலகம்-தென்மார்க் -6-3-2026



வியாழன், 16 ஏப்ரல், 2026

577 (1077) பிரியம் எங்கே!

 

      

   



 பிரியம் எங்கே!


(அற்றம் -  அழிவு.  இறும்பூதை  - மகிழ்ச்சி  ) 


சுற்றிவர எத்தனை இற்றுப் போன நடத்தைகள்!

அற்றம்  அற்புதம்  பிரியங்கள்   எங்கே!


சிறகு ஒடிந்ததா! அன்பு தெரியாத உலகில்

அதைப்பற்றிப்   பேசாதே மனக்குடிலை மூடு!


ஆணவ மேலாடை   இறும்பூதை அழிக்க

அதிமேதாவித்தனத்தால் கௌரவ சிந்தனை அழியும்.


கவிநட்சத்திரம் -வேதா. இலங்காதிலகம். தென்மார்க்.  16-4-2026



       


புதன், 15 ஏப்ரல், 2026

576 (1076) நிழலின் கையை பிடிக்கிறோம்....

 

       


         நிழலின் கையை பிடிக்கிறோம்....


(வடிகட்டும் மனது - சாரத்தைத் திரட்டும் மனது)


நிழலின் கையைப் பிடிக்க எண்ணினேன்

சூரியனை முகில் மறைக்க  மறைந்தது.

மனதை மாற்றும் எழுத்து  எங்கே

மனிதரை மாற்றுகிறது!  வாசிப்பதே இல்லையே!

ஆடையும் உணவும் போதாது அறிவு 

அவசியம் என்று யார் நினைக்கிறார்!

00

வாழ்க்கை எல்லையுள் சுழி சுழியாக

வந்து போவது  இன்பம். எண்ணம்

வசப்படாது  கானல் நீராகிறது வண்ணமின்றி

வடிகட்டும் மனதில் வடியாது கண்ணீர்!

வலிமை மனதில் துளிர்க்கும்  நம்பிக்கை!

வேர்விட்டுக்  கிளைத்து மலர்ந்து பொலியும்.

00

செந்தணல்கவி - வேதா. இலங்காதிலகம். தென்மார்க் - 15-4-2026



      


செவ்வாய், 14 ஏப்ரல், 2026

575 (1075) new year..2026 மேகராசனின் ஒளி!.....

 

  




  மேகராசனின் ஒளி!.....

மேகசாரம்(கற்பூரம்) மேகசாலத்தால் - (முகில் கூட்டம்)
மேழியரும் -( உழவர்)
மேகராசனின் மேதகு ஒளி வர
மேகசாரம் ஏற்றியதாய் மேகசாலத்தால் வெளியானான்.
மேம்பாடுடை மானுடர் நீராடித் தயாரானார்.
மேழியரும் பால்சோறு படைக்கத் தயாரானார்.
00
மேம்பாடாகக் கதிரை விரித்தான் கதிரவன்
மாண்புடன் படையலைப் பகிர்ந்தனர் மாநிலத்தில்
மங்கையர் மலர்சூடி மழலையோடு மகிழ
மணக்கும் புத்தாடையில்குழந்தைகள் குதித்தனர்.
00
மாக்கோலம் சுவைத்த சிறுபூச்சிகள் மகிழ
மண்டலத்துப் பாதியினர் போரினால் துன்புற
மோகப் புகழால் அதிகாரம் எழுந்து
உலகத்தை வேதனையில் முக்குளிக்க வைக்கிறது.
00
கவிச்சுடர். வேதா. இலங்காதிலகம்.தென்மார்க். 14-4-2026




சனி, 11 ஏப்ரல், 2026

574 (1074) சுயநலங்களால் நிகழும் உலகு

 

     


 

  சுயநலங்களால் நிகழும் உலகு

00

தன்னைத் தானே புளுகும் நிலை

சின்ன அறிவா  பெரும் அறிவா!

பின்னும் காந்த அறிவா!உலகம் 

என்ன சொல்லினும் உண்மை அல்ல

இன்ப மயமானது உலகல்ல பொய்யே!

00

அவரவர் சுயநலங்களால் உண்மை பங்கப் படுகிறது

சுயநலங்களால் நிகழும் உலகை எப்படிப் பார்க்கிறாய்!

எண்ணங்களின் மொத்தத் தொகுப்பே மனம்

உள்ளம் வசமானால் உலகும் வசமாகும்

எம் மதிப்பீடு எம் இதயமளவில் தான்

00

மனிதன் தன் இருப்பை   விட்டு

மற்றதை மட்டும் கவனிக்கும் போது

தமது போக்கைச் சரி செய்ய வேண்டும்

தமது உண்மை உறவை நினைக்க வேண்டும்

மனவெளியை நஞ்சின்றிப் பாதுகாக்க வேண்டும்

00

நம் பலவீனமே நமக்குத் துன்பமாகிறது.

ஆம் பிறர் பாராட்டு அங்கீகாரத்திற்கு

காத்திருப்பது அடிமைத்தனம் என்கிறார் விவேகானந்தர்.

உன்னை நீயே வேதனைப் படுத்தாதே

இன்பமாய் வாழப் பழகு!

00

கனல்கவி - வேதா. இலங்காதிலகம் -தென்மார்க் - 11-4-2026



       




புதன், 8 ஏப்ரல், 2026

573 (1073) மார்கழியின் கார்முகிலே!

 

      தமிழன்னை தமிழ் சங்கம் (24-12-2025 இரவு 9.00 மணி)


    



மார்கழியின் கார்முகிலே!

00

(மார்த்தவமாய் - மென்மை தன்மை. பார்வையில் - தோற்றம்.)


00

மார்கழியின் கருமை மேகம் போன்று

பார் களி கொள்ளும் குளிர்மை!

கார்மேக வண்ணனான கண்ணனை அழைக்க

நீர்க்காலமாய் பூ மழை தருவாயே!

00

மார்த்தாண்டன் எங்கோ மாயமாய் ஒளிந்திருக்க

மார்தட்டாது   மார்த்தவமாய் இருளாய் வரும்

பார்வையில் குளிர் காலத் துவக்கமன்றோ!

மார்கழியின் கார்முகிலே!  வருகிறாயா மகிழ்வோடு!

00

தேவர் மாதம் என்பார் சைவர்களுக்கு 

தெய்வத்திற்கு உரியது என்று பூசிப்பார்

திருவெம்பாவை திருப்பள்ளியெழுச்சியின் விரத நேரம்

விருப்புடன் கிறித்துவர்களின் புண்ணியக் கோலம்.

00

விதை விதைக்க ஏற்ற காலமல்ல

மழை கொண்டு வந்து நீராடலுக்கு

அளைந்து விளையாடக் குளம் நிறைக்கும்

தனுர் திங்கள் புண்ணிய மாசம்

00

வைகுண்ட ஏகாதசி விழா சிறப்புறும்

திருப்பாற்கடலை தேவர்கள் அசுரர்கள் கடைந்தனர்

சபரிமலை ஐயப்பன் அவதரித்தார். மகாலட்சுமியின்

மணக்கோலமும் பாவை நோன்பின் புண்ணியமுமிதே!

00

கவிஅரசி - வேதா. இலங்காதிலகம்.  தென்மார்க்.  22-12-2025



       




572 (1072) 79 bday .-vetha.2026..

 

         

 79 bday .-vetha.2026..



          Daniel Johnson Manickam

Happy blessed birthday Aunty.God bless you

4d

Reply

Vetha Langathilakam

Daniel Johnson Manickam Thank you Bro... God bless you all

4-4-2026



Leela Nagamani

happy birthday Sticker by aspar studio

-4-4

Vetha Langathilakam

Leela Nagamani அன்பான பேரன்புக்கு நன்றி!...வாழ்க வளமுடன்!....

4d



Ithaya Thamby

Happy Birthday Sticker

4

Vetha Langathilakam

Ithaya Thamby அன்பான பேரன்புக்கு நன்றி!...வாழ்க வளமுடன்!....

4



Jegatha Srikantharajah

Wish you Happy Birthday Baby acca

God bless you to long life and health care and happiness.

Happy Birthday Day GIF

4

Vetha Langathilakam

Jegatha Srikantharajah அன்பான பேரன்புக்கு நன்றி!...வாழ்க வளமுடன்!....

4



Kana Ravind

Celebrate Happy Birthday Sticker

4d

Stella Paulraj

Happy Birthday Aunty❤️🎉🎁🎊

4

Vetha Langathilakam

Stella Paulraj மிக மகிழ்ச்சி : நன்றி தங்கள் பேரன்பிற்கு.

வாழ்க வளமுடன் நீடு.!!!!........

4



Jeyaa Polikai

Cumple Happy Birthday Sticker by Vania Bachur

4

Vetha Langathilakam

4d



Yoha Lakshmy

Happy Birthday🎉🎂🎈

4

Vetha Langathilakam

Yoha Lakshmy அன்பான பேரன்புக்கு நன்றி!...வாழ்க வளமுடன்!....

4d



Regina Anandarajah

Happy Birthday 🎊🎉🎁

4

Vetha Langathilakam

Regina Anandarajah அன்பான பேரன்புக்கு நன்றி!...வாழ்க வளமுடன்!....

4



Sivaneswary Sivarasah

இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.🎊💐🎂

4

Vetha Langathilakam

Sivaneswary Sivarasah அன்பான பேரன்புக்கு நன்றி!...வாழ்க வளமுடன்!....

4



M.A. Ramamoorthy

இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்

4

Gamini Thamilvaranan

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் 🎂

4

Thevaranjini Gowripalan

Happy birthday Acca 🎊🎉

4

Vetha Langathilakam

Thevaranjini Gowripalan Nanry Ranji

4



Sujatha Anton

இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் நலமுடன் பலமுடன் வாழ்க வளமுடன். பகவான் ஆசி வேண்டி வாழ்த்துகின்றோம்.☺️🙏🙏🍀

4

Vetha Langathilakam

Sujatha Anton மிக்க நன்றி சகோதரி.

பேரன்பிற்கு வாழ்த்துகள்.

4d



Genga Stanley

Happy birthday

4

Kanagasegaram Vimalasegaram

Happy Birthday Party GIF, GIF may contain party, celebration, happy birthday, cake, confetti, ls and lenasingla

4

Nava Sellathurai

Happy birthday to you

4

Kugaananthaletchumy Ganeshan

இனிய பிறந்தநாள் அம்மா! நலமுடன் பலமுடன் வாழ்க வளமுடன். .☺️🙏🙏🍀

Happy Birthday Song Sticker by normanandpiper

4

Baba Muthu

Wish you Happy Birthday Baby acca

God bless you to long life and health care and happiness.

4

Sathyadas Thavarasa

happy birthday

3

Ruban Shiva

Happy Birthday அக்கா 🎂🎉🎊

3

Linka Sathiyamoorthy

இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.🎊💐🎂

3

Drums Jerry

🎂Wishing you to have a very blessed year ahead aunty. Happy birthday & stay young always 💐🎉🎉🎉

Celebrate Happy Birthday Sticker

3

Thushiyanthan Ganeshamoorthy

இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் அன்ரி.

3

Kamalanathan Vellaikuddy Gaden

இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் 💐

3y

Nirmalan Somasudaram

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

3

Bawany Balakrishnan

Happy Birthday GIF by sendwishonline.com, GIF may contain happy, birthday, happy birthday, happybirthday, bday, happy birthday to you, happybday, hbday, happy birth day, birthday greetings, sendwishonline, group cards, birthday cards, coworker birthday and sendwishonline happy birthday

2d

Paramasivam Ponnampalam

🙏🏼

2d


Sukumar Sukumar Lalitha

Happy birthday anti

2d


Nagu Satha

Lovely photos

1

Rathy Mohan

அழகான படங்கள்..

1d



    




















ஞாயிறு, 5 ஏப்ரல், 2026

571 (1071) மனப் பறவை ஓயாதது.....

 

         


        மனப் பறவை ஓயாதது.....

00

விலகியவர்கள் நெருங்கியும்

நெருங்கியவர்கள்  விலகியும்

வீறாப்புக் காட்டும்  மாறும்

காலமிது! 

00

மேடையில் பிரபலமற்றவரை

ஏகமாகப் புகழ்தலும்

பிரபலத்தை அலட்சியம் செய்தலும்

சிலரது கைவந்த கலை.

00

இதே அனுபவம் அவர்கள்

பெறும் அனைத்தும் புரியும்.

காயப்படத்தியவர்களை மௌனம்

மன்னிப்பெனும்  பலமான மொழியால்

துன்பப் படச் செய்யலாம்.

00

நான் தகுதியானவன் தான்

எழுந்திடுவாய் என்ற திகில்

அவனை மௌனியாக்கியது.

எதிலும் இடிபடாத குருவியாக

என் மனப்பயணம் அலைகள் போன்றது.

00

ஒவ்வொரு கவிதையும் அளவின்றி

ஓங்கி உயரம்- நிறை-அகலம்

என்று குதிரை ஓட்டுகிறது.

மனப் பறவை ஓயாதது.

00

வேதா பாரதி.  வேதா. இலங்காதிலகம். தென்மார்க்.  5-4-2026 



        


புதன், 1 ஏப்ரல், 2026

570 (1070) penmai -- சான்றிதழ்க் கவிதை - புதுப்புனல் -

 

          


சான்றிதழ்க் கவிதை


புதுப்புனல் - உலக மகளிர் தின சிறப்புக் கவிதைப் போட்டி தலைப்பு





பெண்ணென்று எண்ணிப் பெருமிதம் கொள்வோம்

00

ஆதி மானுட  நதிப் பெருக்கின்

ஆதாம் ஏவாள் படைப்பதிகாரம் இது

அர்த்தநாரீசுவரர் ஆகி ஆண்டவனும் பெருமிதம்

கோர்த்து நங்கையைத் திருமகள் ஆக்கினார்.

00

பெண்ணென்று எண்ணிப் பெருமிதம் கொள்வோம்

உண்மையில் ஐம்பது விகிதமானோர் ஆனினும்

எண்ணத்திற்கு உரியவர்களா உலகப் பலாத்காரங்களால்!

திண்மை நிலை வேண்டும் மகளிருக்கு!

00

மெட்டி வளையல் ஒலியின் மங்கலம்!

கட்டிய பூமாலை வாசைன செல்வம்!

கல்வி கடமையில் ஊன்றுகோலாம் மாது

கோபுரத்து விளக்காவாள் ஊரிலும் வீட்டிலும்!

00

வேதா. இலங்காதிலகம் -தென்மார்க் - 6-3-2026


      



588 (1088) மாயக் காலம்.

            மாயக் காலம். 00 (கேலம் -விளையாட்டு. சாலகம் - சிலந்திவலை. தாலம் -பனைமரம். நாலா - பள்ளத் தாக்கு.) 00 காலம் ஒரு நீண்ட கனவு ஆலம் ...