தமிழன்னை தமிழ் சங்கம் (24-12-2025 இரவு 9.00 மணி)
மார்கழியின் கார்முகிலே!
00
(மார்த்தவமாய் - மென்மை தன்மை. பார்வையில் - தோற்றம்.)
00
மார்கழியின் கருமை மேகம் போன்று
பார் களி கொள்ளும் குளிர்மை!
கார்மேக வண்ணனான கண்ணனை அழைக்க
நீர்க்காலமாய் பூ மழை தருவாயே!
00
மார்த்தாண்டன் எங்கோ மாயமாய் ஒளிந்திருக்க
மார்தட்டாது மார்த்தவமாய் இருளாய் வரும்
பார்வையில் குளிர் காலத் துவக்கமன்றோ!
மார்கழியின் கார்முகிலே! வருகிறாயா மகிழ்வோடு!
00
தேவர் மாதம் என்பார் சைவர்களுக்கு
தெய்வத்திற்கு உரியது என்று பூசிப்பார்
திருவெம்பாவை திருப்பள்ளியெழுச்சியின் விரத நேரம்
விருப்புடன் கிறித்துவர்களின் புண்ணியக் கோலம்.
00
விதை விதைக்க ஏற்ற காலமல்ல
மழை கொண்டு வந்து நீராடலுக்கு
அளைந்து விளையாடக் குளம் நிறைக்கும்
தனுர் திங்கள் புண்ணிய மாசம்
00
வைகுண்ட ஏகாதசி விழா சிறப்புறும்
திருப்பாற்கடலை தேவர்கள் அசுரர்கள் கடைந்தனர்
சபரிமலை ஐயப்பன் அவதரித்தார். மகாலட்சுமியின்
மணக்கோலமும் பாவை நோன்பின் புண்ணியமுமிதே!
00
கவிஅரசி - வேதா. இலங்காதிலகம். தென்மார்க். 22-12-2025


Meenu Sonu
பதிலளிநீக்குVetha Langathilakam
திருவெம்பாவை திருப் பள்ளியெழுச்சியின் விரத நேரம்.
விருப்புடன் கிறிஸ்துவர்களின் புண்ணியக் கோலம்.
சிறப்பு இனிய வாழ்த்துகள் சகோதரி.23-12-2025
Pss Manian
பதிலளிநீக்கு👌 அருமையான வரிகள். 🌹 🌹
Vetha Langathilakam
Pss Manian வருகையால் பெருமை...
கருத்தினால் மகிழ்வு - 9-4-2026
No photo description available.
Vetha Langathilakam
பதிலளிநீக்குThank you Nisha Rajesh...9-4-2026...(.Thamil vaanam..)
David Samuel
பதிலளிநீக்குphoto wish·
Awesome Nice One Sticker by Ben Tuber
Vetha Langathilakam
David Samuel thank you bro.....(padaippu)...9-4.2026
Vetha Langathilakam
பதிலளிநீக்குThank you Rizvan teabreak kavithai......9-4-2026
Vetha Langathilakam
பதிலளிநீக்குNanry Saraswathy...(padaippu).....10-4-2026
Vetha Langathilakam
பதிலளிநீக்குNanry Rajendran......(Erodu thamilanpan)...11-4-2026