சனி, 31 அக்டோபர், 2026

645 (1145) UUdakam -cidny ATBC - வாழ்க்கை

 

   

   



 எனது.... வாழ்க்கைக் - கவிதை 3 வதாக வாசிக்கப்பட்டது.

வாழ்க்கை
மண் தொட்ட நாளிலிருந்து
விண் தொடும் காலமே
அண்டத்தில் எமது வாழ்க்கை.
கண்டமும் களிப்புமே சீவிதம்.
அந்தியின் நிறத்தில் மயங்கல்
சொந்தமான கவிதைக் கச்சேரி
அந்தகாரமற்ற உற்சாகம்
இந்த வாழ்வின் ஊன்றுகோல்.
என் வாகையின் காரணம்
நன்மை தரும் அமைதி.
உண்மையாய் உன்னை மதி!
உன் எதிர்பார்ப்புகளைக் குறை.
ஏற்றுக் கொள்ளும் மனது
ஆற்றுப் படுத்தும் வாழ்வை.
ஊற்றான உணர்வுடையது உலகம்.
உன்னத மனச்சாட்சியோடு வாழ்!

வேதா. இலங்காதிலகம் -தென்மார்க் -16-10-2026  



     


புதன், 28 அக்டோபர், 2026

644 (1144) uudakam.. zoom kavithai uravu.....

 

 


       


  (கவி உறவு – கவிதை)

¤¤

வாழ்த்துகள் வெறும் வார்த்தைகள் அல்ல.

¤¤

வாழ்த்தும் வரிகள் மனதில்

ஆழ்கடலாய் ஆனந்தத்தை நிறைக்கும்.

தாழ்வு நிலையை விரட்டும்

ஆழ்ந்த திருப்தி இறைக்கும்.

¤¤

வீழ்த்தாத வரிகள் என்றும்

வீணாகானமாய் வீற்றிருந்து  நெஞ்சில்

வீரச்சலங்கையாய் வீரியம் தரும்.

வீர மாலைக்குச் சமனாகும்

¤¤

தாழ்போடாத தமிழ் உயரட்டும்

தாழ்ப்பாள் அற்ற மொழியிது.

தானாதிபதி ஆழ்ந்து நீந்தினால்.

தாராளமனமே தரும் அங்கீகாரம்.

¤¤

ஆளுமை மனம் ஆதரிக்கும்

ஆள்வினை (முயற்சி) குறையாது இயங்கும்

ஆவளித்தல் (ஒழுங்குபடுத்தல்) எண்ணமொரு வானம்.

ஆரத்தி போன்றதே வாழ்த்து.

¤¤

வாழ்த்து தெரிவிக்கும் மனிதரின்

வாகுடை அன்பு – மரியாதை

வாகை நிறைந்த வாக்கியம்.

வழிகாட்டும் ஒரு வாக்குமூலம்

¤¤

அளவற்ற மகிழ்வும் பூரண

ஆசீர்வாதமும் பல இலட்சம்

ஆணி முத்துகள் பெறுமதியானது.

அனுதினம் வாழ்த்துங்கள்! வாழ்த்துங்கள்!

¤¤

வேதா. இலங்காதிலகம் -தென்மார்க் - 26-10-2026



        




வெள்ளி, 23 அக்டோபர், 2026

643 (1143) அருட்சோதியே!....

 

       

  

     



  அருட்சோதியே!.... 

00

ஒருங்காய் இதமாய் அரிதாய் விரிவாய்

வருவாய் முருகாய் இனிதாய் உயிராய்

அருகாய் இருப்பாய் திருவாய் திறப்பாய்

தருவாய்  திருவிழாவாய் கருணையாய் அன்பை

00

விருத்தமாய்  அருத்தமாய் உருத்தாய் விரும்புவாய்

பொருத்தமாய் நிருத்தமாய் கருத்தாய் மருத்தனாவாய்

பொருத்தாய் இருந்தாய் பருத்தாய் காதலாய்

விருந்தாய்  மனதால்  அருளைத் தருவாய்!

00

திருத்தமாய் சிறப்பாய் பிறப்பைத் திருவாய்

விரும்பிட விருத்தியைப் பொருத்திட நிருவகிப்பாய்.

நிருவாகம் திருத்தமாய் திருநாள் சிருட்டிப்பாய்.

அருத்தமாய் அருட்சோதியாய் அருள் பெருக்குவாய்

00

கவிமணி – வேதா.இலங்காதிலகம்- தென்மார்க்- 4-3-2026



                   



செவ்வாய், 20 அக்டோபர், 2026

642 (1141) வானவில் இளமை..

 





வானவில் இளமை..

¤¤

அன்றைய வாலிபம் சென்றது

இன்றைய முதுமை வென்றது

ஒன்றும் நிரந்தரமல்ல ஒன்றுதலாகிறது

நன்றாவது ஒழுக்க வாழ்வென்பது.

¤¤

கதையானது இளமை உடலில்.

கருமமாற்றுகிறது  இளமை உள்ளத்தில்

கவலையை ஆளக் கற்றால்

முதுமை இனிக்கும் கனியாகும்

¤¤

வேதா. இலங்காதிலகம் - தென்மார்க் 8-9-2021




         



சனி, 17 அக்டோபர், 2026

641 (1140) பேரார்வ மனம்

 


     



  பேரார்வ மனம் .


எதைச் செய்ய விருப்பமுள்ளதோ

அதைச் செய்ய மனம்

அதிக ஆர்வம் கொள்ளுகிறது

சடசடவென இதயம் சதிராடுகிறது.


இது சுதந்திர முயற்சி

பொதுவான சிறையற்ற மனம்

எண்ணச் சிகரத்தில் நான்.

எந்தக் குறுக்கீடும் இல்லை


இன்பக் கணம்! நினைவுகள்

தொலையாத  சிம்மாசனம்! முடிவும்

தொடக்கமும் பெருமுயற்சி! அனுப்பும்

பேரார்வ ஊற்றுகள்! புத்துயரத்திற்கு!


வேதா. இலங்காதிலகம் - தென்மார்க் - 10-10-2026



       




வியாழன், 15 அக்டோபர், 2026

640..(1139) முதுமையின் தெளிவு

 






 முதுமையின் தெளிவு 


மயற்கை தரும் இளமை

செயற்கை யற்ற பசுமையானது

வயதின் வரைகள் தசையில்

இயற்கை மடிப்புகள் ஆகின்றது

¤¤

பளிங்கு முகம் மாறிட

ஒளிர்வற்ற தளர்வு ஏறுகிறது

தெளிஞன்(அறிஞன்)ஆகிறான் 

தெளிவுடை அறிவால்

நெளியாது நிமிர்கிறான் குணத்தால்.

¤¤

பிளவுபடாது  சமூகத்தை நேராக்கி

மாளிகையாக்க அயராது முயல்வான்.

வெளிப்படையாக இறப்பின் முன்

துளியாகினும் மனிதநேயம் பேணுவான்.

¤¤


வேதா. இலங்காதிலகம்  தென்மார்க்  15-10-2026



        



செவ்வாய், 13 அக்டோபர், 2026

639 (1138) 14 - sanrithal kavithai -Ravi kalandithal



     



சான்றிதழ்க் கவிதை• 14 - 


இரவி கலை இலக்கிய காலாண்டு சஞ்சிகை.

தலைப்பு -

களத்துமேட்டிலே நிழல் குடையிலே.....

00

பகட்டான நீலஆகாசம் பச்சை வயல்//

பக்கத்தில் ஆருமில்லை சூரியனும் வெக்கத்தில//

பதுங்கிட நினைக்கிறான் ஆகாசத்தினுள்ளே//

பக்கலில் வாயேன் விரசா அணைப்பேன்டி!//

00

வீட்டோடு பொண்ணு தர நாளாகும் நீண்ட//

ரெட்டைச்சடை மல்லிகையில் சோக்காய் இருக்கிறாயடி! //

எட்டி இருக்கிறியே கிட்டே வாவேன்டி! //

கொட்டித் தீர்க்க வாலிபஆசை ஏங்குதடி! //

00

மண் கொத்தும் மாமனுக்கு எதிர்காலம் ஓசரந்தான் ! //

மையலையும் பழஞ்சோறில் குழைப்பவளே ராசாத்தி! //

மருதாணிக் கன்னத்தை மாமன் சொத்தாக்குவேன் //

மஞ்சள் தாலியோடு கொலுசும் காத்திருக்கு! //

00

கோயிலுக்கு வடக்கிலே கொல்லைப் புறத்திலே //

கிணற்றடியில் முத்திட்டோம் கிராமியக் கண்ணழகே! //

காத்திருந்தது போதுமடி கண்ணால நாள் II

காண ஏங்குது மனசடி சொக்கியே!  //

00

கவிச்சாகரம் - வேதா. இலங்காதிலகம். தென்மார்க் -27 -3-2026



       



சனி, 10 அக்டோபர், 2026

638 (1137) uudakam - சிட்னி வானொலிக் கவிதை. (Muthumai)

 

  


      https://www.facebook.com/sownthary.sivananthan/videos/2389021425202726

  சிட்னி வானொலிக் கவிதை.

எனது மூன்றாவதாக வாசிக்கப் பட்டது.
இங்கு வரிகளில் தரப்பட்டுள்ளது
இன்று - 10-10-2026
அனுபவக் கிரீடமிடும் நரை முதுமை
¤¤
முதுமை ஆயுட்காலத் தூது
பதுமையான பருவம் உயிர்களுக்கு.
இது மலர்தூவி வரவேற்கும்
மேதகு விளையாட்டிடம் அல்ல.
¤¤
முதுமை வாழ்நாளின் பத்மாசனம்.
பொதுமைப் பேரறிவுப் பசுமை.
புதுமையல்ல கொடும் விலங்காக
மெதுமையாகச் சிலரைக் கைதாக்குகிறது
¤¤
கட்டுடலின் அட்டகாசங்கள் படமாகும்
கட்டம் - அட்டாவதானங்கள் அடங்கும் இராச்சியம்.
கொட்டமடித்த இளமை தொலைந்ததால்
அள்ளியணைக்கும் நினைவு அருகிலிருந்தும் மறக்கும்.
¤¤
கனமான இளமை மிடுக்குத் தவறுகளைத்
தினம் எண்ணி மறுகுவர். பிறருக்கு
முதுமரநிழலில் செதுக்கிய அனுபவங்களை
முன்மாதிரியாகச் செம்மையாய் வழங்கலாம்.
¤¤
வயோதிபம் அந்திம சங்கம நிலையம்.
நங்கூரமிட்ட மனித சக்திகள்
சங்கூதித் தளரும் சித்திகள் - நீங்கள்
தாண்டிய தாராள வாழ்வில் நிறைந்திருங்கள்.
¤¤
வேதா. இலங்காதிலகம் - தென்மார்க் 9-10-2026




செவ்வாய், 6 அக்டோபர், 2026

637 (1136) பிரதிபலிக்கும் நதி

 


       



 பிரதிபலிக்கும் நதி

¤¤

இரவின் கருமையை சூரியன் மெல்லுகிறான்.

பரப்பும் கதிர் ஆனந்தத்தைக் காட்டுகிறது.

விரவும் நதி அழகாகப் பிரதிபலிக்கிறது.

சருகுகள் மறுத்தாலும் நதி நகர்த்துகிறது.

அருகருகாக அனைத்iயும் ஒன்று சேர்த்து

விருப்போடு அசைகிறது நதி அற்புதமாக.

¤¤

வேதா. இலங்காதிலகம்.- தென்மார்க் -26-9-2026 







திங்கள், 5 அக்டோபர், 2026

சனி, 3 அக்டோபர், 2026

635 (1134) uudakam cidny radio ATBC ..peace


   



https://www.facebook.com/sownthary.sivananthan/videos/28447169218277452/


  சர்வதேச அமைதி நாள் (புரட்டாதி - 21)

¤¤
நாட்டின் அமைதி செழிக்க
வீட்டிலிருந்து நாம் தொடங்குவோம்.
காட்டமான ஆங்கார மனதை
நீட்டிட வேண்டாம் அமைதியாகுங்கள்.
¤¤
வன்முறையைக் குறைத்து மனதில்
மென்முறையாம் அன்பை ஊன்றுங்கள்.
மனிதநேயமும் சமாதானமும் நிறையும்.
மரியாதை விட்டுக்கொடுப்பு மேன்மையாகும்.
¤¤
சுற்றம் சூழல் அமைதியாயிருந்தால்
பற்றுடை மதிப்பு செழிக்கும்.
கற்ற அறிவுடன் நன்றியைப்
பகிர்ந்து விழிப்புணர்வைப் பரப்புவோம்.
¤¤
பகையை மறந்து நகைத்திருப்போம்
திகைப்பூட்டும் செய்திகள் குறையட்டும்.
தொகை தொகையாய் நாடு பிடிக்கும்
திகிலான வாழ்வு மறையட்டும்.
¤¤
வேதா - இலங்காதிலகம் - தென்மார்க் -26-9-2026





649 (1149) photo poem -5

       5.       photo  poem