புதன், 28 அக்டோபர், 2026

644 (1144) uudakam.. zoom kavithai uravu.....

 

 


       


  (கவி உறவு – கவிதை)

¤¤

வாழ்த்துகள் வெறும் வார்த்தைகள் அல்ல.

¤¤

வாழ்த்தும் வரிகள் மனதில்

ஆழ்கடலாய் ஆனந்தத்தை நிறைக்கும்.

தாழ்வு நிலையை விரட்டும்

ஆழ்ந்த திருப்தி இறைக்கும்.

¤¤

வீழ்த்தாத வரிகள் என்றும்

வீணாகானமாய் வீற்றிருந்து  நெஞ்சில்

வீரச்சலங்கையாய் வீரியம் தரும்.

வீர மாலைக்குச் சமனாகும்

¤¤

தாழ்போடாத தமிழ் உயரட்டும்

தாழ்ப்பாள் அற்ற மொழியிது.

தானாதிபதி ஆழ்ந்து நீந்தினால்.

தாராளமனமே தரும் அங்கீகாரம்.

¤¤

ஆளுமை மனம் ஆதரிக்கும்

ஆள்வினை (முயற்சி) குறையாது இயங்கும்

ஆவளித்தல் (ஒழுங்குபடுத்தல்) எண்ணமொரு வானம்.

ஆரத்தி போன்றதே வாழ்த்து.

¤¤

வாழ்த்து தெரிவிக்கும் மனிதரின்

வாகுடை அன்பு – மரியாதை

வாகை நிறைந்த வாக்கியம்.

வழிகாட்டும் ஒரு வாக்குமூலம்

¤¤

அளவற்ற மகிழ்வும் பூரண

ஆசீர்வாதமும் பல இலட்சம்

ஆணி முத்துகள் பெறுமதியானது.

அனுதினம் வாழ்த்துங்கள்! வாழ்த்துங்கள்!

¤¤

வேதா. இலங்காதிலகம் -தென்மார்க் - 26-10-2026



        




6 கருத்துகள்:

649 (1149) photo poem -5

       5.       photo  poem