ஞாயிறு, 30 ஆகஸ்ட், 2026

620 (1119) UUdakam..ATBC radio cidny...29-8-2026 (nilaiyamai)

 

    https://www.facebook.com/sownthary.sivananthan/videos/917203240983920

நிலையாமை – சிட்னி வானொலிக் கவிதை .

எனது கவிதையான 'நிலையாமை' 29-8-2026 சிட்னியில் நடைபெற்ற ATBC வானொலி நிகழ்ச்சியில் அன்புடன் வாசிக்கப்பட்டது. 🎙️💐
அழகாக வாசித்த சௌந்தர்யா (RJ) அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். ❤
ஒவ்வொரு சனிக்கிழமையும் இவ்வாறான இனிய சந்திப்புகளும் கவிதை வாசிப்புகளும் நடைபெறுவது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது.
நாம் அனைவரும் தொடர்ந்து சந்திப்போம்...
கவிதையோடும் அன்போடும் இணைந்திருப்போம்! 🌷
அன்புடன்

வேதா. இலங்காதிலகம் - தென்மார்க். 30-8-2026


சனி, 29 ஆகஸ்ட், 2026

619 (1118) thamil van avai..August 2026.

 

     https://www.youtube.com/watch?v=2BZ--mOSYjU

famouse அகஸ்தியர் 100 ஆண்டு நிகழ்வு தமிழ் வான் அவையில் ஆவணி மாதம் நடை பெற்ற போது. 29-8-2026.








வெள்ளி, 28 ஆகஸ்ட், 2026

618 (1117) PAYANAM - 8வது பயணக்கதை - போர்த்துக்கல் இறுதி பிரிவு – 9வது.

 




 8வது பயணக்கதை - போர்த்துக்கல் இறுதி பிரிவு – 9வது.

இரண்டு குதிரைகள் மாதிரியான சிலை
இது போர்ச்சுகலின் சர்வாதிகார எஸ்டாடோ நோவோ அரசாங்கத்தின் ஆட்சிக் காலத்தில் 20-ஆம் நூற்றாண்டில் ஆய்வாளர்களைப் பற்றிக் கட்டப்பட்ட ஒரு நினைவுச்சின்னமாகும். அந்த அரசாங்கம் கண்டுபிடிப்புக் காலத்தின் நினைவைப் பயன்படுத்தி தேசத்தையும் அக்காலத்தில் எஞ்சியிருந்த அதன் காலனித்துவப் பேரரசையும் பெருமைப்படுத்தியது.- இரண்டு குதிரைகள் மாதிரியான சிலை
ஃபீனீஷிய எட்ருஸ்கன் பிக்லிஷ் ரோமானிய மற்றும் கிரேக்கப் புராணங்களில் காணப்படும் ஒரு புராண உயிரினம்.
ஹைப்போகேம்ப் (அல்லது ஹைப்போகாம்பஸ்) என்பது குதிரையின் முன்பகுதி மற்றும் மீனின் வாலை கொண்ட கற்பனையுள்ள கடல் உயிரினம். மக்கள் இதை அன்றாடமாக 'சீஹார்ஸ்' என்று அழைக்கிறார்கள் இது சிறிய உ ண்மையான நீந்தும் மீனுக்கான அறிவியல் பெயருமாய் உள்ளது. கற்பனை மற்றும் அர்த்தம் கிரேக்கம் மூலங்கள்: இந்த பெயர் கிரேக்க வார்த்தைகள் 'ஹிப்போஸ்' (குதிரை) மற்றும் 'காம்போஸ்' (கடல் மன்ஸ்டர்) என்பதிலிருந்து வந்தது.
பொசிடான் வண்டி: பண்டைய புராணங்கள் சொல்லும் பொழுது இந்த சக்திவாய்ந்த கடல் குதிரைகள் கடல் தேவன் பொசிடானின் வண்டியை இழுத்தன. நிஜ மீன்கள்: இந்த சிறிய கடல் மீன்குழுவும் 'ஹிப்போகாம்பஸ்' எனப் பெயர் பெற்றது. இதன் குதிரைப் போன்றத் தலை மற்றும் கழுத்துக்குப் பலனாக. மற்ற பயன்பாடுகள் மூளைப் பகுதி: மனித மூளையின் முக்கிய பகுதியும் ஹிப்போகாம்பஸ் என அழைக்கப்படுகிறது. ஏனெனில் ஆரம்ப காலம் உடல் அமைப்பு ஆராய்ச்சியாளர்கள் இதன் வளைந்த வடிவம் கடல் குதிரையைப் போல் தோன்றுவதாக நினைத்தனர்.
இத்துடன் போர்த்துக்கல் பயணக் கதை முடிவுக்கு வருகிறது.
இந்தியாவைக் கடல் மார்க்கமாகக் கண்ட வஸ்கொடகாமா நினைவாகப் நீண்ட பாலம் ஒன்று லிஸ்பனில் உள்ளது. அதை நாங்கள் பார்க்கவில்லை. போர்ட்டோ அடுத்த பெரிய நகரம் இன்னும் பல உள்ளன. லிஸ்பன் மட்டுமே நாங்கள் பார்த்தது. உடைகள் உணவுகள் கைப் பைகள் மலிவு தான். (தாங்களாகச் செய்யும் கைப் பைகள்)
நான் மச்சம் உண்ணாதவள். எனக்கு சிறிது சிரமமாகவே இருந்தது. பால் தேநீர் மிகவும் பிடிக்கும். பால் எங்கும் வாங்கலாம். தேயிலை வீட்டிலிருந்து கொண்டு போனேன். (வேறு பல சாதித் தேயிலைகள் எனக்குப் பிடிக்காது.) காலை உணவாக நானும் கணவரும் இதைப் பாவித்தோம்.
குமிழிகள் துள்ளும் சுடுநீர்த் தொட்டியில் மாலையில் அரை மணிநேரம் அநுபவித்தோம். இதை மசாஜ் அல்லது தெரபி என்றும் சொல்லலாம்.
இனி வேறொரு பயணத்தில் சந்திப்போம்
நன்றியுடன் தகவல்கள் - இணையத்தள உதவி.

வேதா. இலங்காதிலகம் - தென்மார்க் - 28-8-2026





திங்கள், 24 ஆகஸ்ட், 2026

617 (1116) payanam - போர்த்துக்கல். 8வது பயணம் - 8

 

   


 போர்த்துக்கல். 8வது பயணம் - 8

காஸ் கைசில்(cascais ) நாம் தங்கிய வீடு. அரைவாசித்தூரம் அத்திலாந்திக் கடலோரம் புகைவண்டியில் பயணித்தோம். மகா பெரிய கப்பல்கள் நடுக் கடலில் தரித்து நிற்பதைக் கண்டோம். பின் தாகஸ் நதியைப் பார்த்தபடி அதாவது தாகஸ் நதியோரம் பயணித்தோம் லிஸ்பனுக்குப் போக.
புகையிரத நிலையத்தில் மஞ்சள் நிற டிக்கட் வாங்கினால் பஸ் -ரெயின் டிராம் 3லும் பயணம் பண்ணலாம் 24 மணித்தியாலத்தினுள்.
அப்படி 2 தடவை அனுபவித்தோம். அது தவிர பழைய மஞ்சள் டிராமில் பயணித்தால் பல மூலை முடுக்கெல்லாம் மேடு பள்ளமாக மலை இடுக்குகளில் பழைய லிஸ்பன் பாதையெல்லாம் ஓடும். வயதுபோனவர்கள் ஏறினால் உடனே எமது (வயோதிபருக்கு) இருக்கையை எழுந்து தருகிறார்கள். மஞ்சள் டிராமில் நாங்கள் இருப்பதைப் படத்தில் காணுகிறீர்கள்.
தாகஸ் அகண்ட நதியோரம் அப்படியே ஏதோ அத்லாந்திக் கடலோரம் போல ஒரு பிரமை தருகிறது. சனங்கள் குவிந்தபடியே உள்ளனர் நீரின் ஓரம்.
சாப்பிடும் போது இசை பாடியபடி கிட்டாருடன் எங்களைச் சுற்றிச் சுற்றி பணம் வசூலிக்கிறார்கள். அதே போல சுவரெல்லாம் ஓவியங்கள் தான். இவை பொதுவான தகவல்கள்.
பார்க்கும் இடங்களில் பனைமரம் - தென்னைமரம் என்றோம். உண்மையில் பனையுமல்ல தென்னையுமல்ல. மாதிரி தான். படத்தில் காணுகிறீர்கள்.
பேஸ்ரி-என்ற உணவு மிக பிரபலம்-படத்தில் காணலாம்

"லிஸ்பன் பெல் சர்ச்" என்ற சொற்றொடர் போர்ச்சுகலின் லிஸ்பன் நகரில் உள்ள வரலாற்று மணி கோபுரங்களைக் குறிப்பது என்றே கொள்ளலாம், உதாரணமாக மத்திய லிஸ்பன் பேராலயம் (Sé de Lisboa) அல்லது சென்ட் அன்டோனி தேவாலயம். தமிழில், ஒரு தேவாலயம் மணி கோபுரத்தை மணிக்கோபுரம் (மணிக்கோபுரம்) என கூறுவர், மற்றும் தேவாலயத்தை தேவாலயம் அல்லது ஆலயம் (ஆலம்) எனக் கூறலாம் லிஸ்பனில் உள்ள புனித அந்தோனியார் தேவாலயம். ரோமான்ஸ்க் கட்டிடக்கலை, போர்ச்சுகல் - லிஸ்பன் பேராலயம், 1147 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. ஒரு கோட்டைக் கட்டுமானத்தை போல தெரியும் இரண்டு வலுவான மணி மாளிகைகள் கொண்ட பேராலயத்தின் முக்கிய முகப்பு, நார்மன் முறையில் கட்டபட்டது.

posed--24-8-2026











சனி, 22 ஆகஸ்ட், 2026

616 (1115) UUdakam....சாட்சி -- (சிட்னி வானொலி

 


       


    https://www.facebook.com/sownthary.sivananthan/videos/1039867808796569

சாட்சி --
(சிட்னி வானொலிக்கு கவிதை)

சாட்சியில் சிறந்தது மனச்சாட்சி
காட்சியை உள்ளபடி உரைத்தல்
மாட்சியாகிறது. அநீதியின்
நீட்சி பொய்சாட்சியாகிறது.
00
ஆதாரமான அத்தாட்சியே சாட்சி.
கம்பர் புலமையில் பொறாமையானார்
ஒட்டக் கூத்தர். துமி என்ற
சொல்லிற்குச் சாட்சி கேட்டார்.
00
பாவிக்காத சொல்லுக்குச் சாட்சி
மனம் வருந்திக் கலைவாணியிடம் கம்பர்
வேண்டினார். அடுத்தநாள் கூத்தருடன் உலா
சென்றார். ஒரு பெண் நான்கு குழந்தைகள்.
00
தயிர் கடைந்ததாய்...குழந்தைகளே!
சற்றுத் தூரமாக விளையாடுங்கள்
நான் கடையும் தயிரின் துமி
உங்கள் மேல் சிதறும் என்றாள்.
00
ஒட்டக்கூத்தர் இச்சொற்பாவனையைக்
கேட்டு தான் தோற்றதை உணர்ந்தார்.
தான் எழுதிய இராமாயணத்தை எரித்தார்.
கம்பனே ஓடிப்போய் கூத்தரின்
உத்தர காண்டத்தையாவது காப்பாற்று
என அசரீரி கேட்டது.
00
ஓடோடி ஒட்டக்கூத்தர் இல்லம் வந்து
நெருப்பையணைத்தார்.உத்தரகாண்டம் தப்பியது.
கூத்தரே ராமபட்டாபிசேகத்துடன் என்இராமாயணம்
நிறைவுபெறுகிறது. உத்தரகாண்டத்தை எழுதுமாட்டேன்.
உங்களதே உலகில் நிலைபெறும் என்றார்.
00
கலைவாணி பெண்ணாகி நான்கு
வேதங்களும் குழந்தைகளாகி ஒட்டக்கூத்தருக்குச்
சரஸ்வதி சாட்சியாகி கூத்தரின் பொறாமையை எரித்தாள்.
00.
வேதா. இலங்காதிலகம் - தென்மார்க் - 21-8-2026
பிரசுரித்த திகதி - 22-8-2026



செவ்வாய், 18 ஆகஸ்ட், 2026

615 (1114) payanam - போர்த்துக்கல். 8வது பயணம் - 7

 

     




      போர்த்துக்கல். 8வது பயணம் - 7


லிஸ்பனில் உள்ள 25 de Abril Bridge
என்பது


போர்த்துக்கல் நாட்டின் தலைநகரான லிஸ்பனையும் போர்த்துக்கல் - அல்மடா நகரையும் இணைக்கும் ஒரு பெரிய தொங்கு பாலமாகும். தாகஸ் நதிக்கு மேலாக இணைக்கப் பட்டுள்ளது. இது அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோவின் கோல்டன் கேட் பாலத்தை ஒத்த தோற்றமுடைய இது ஆகஸ்ட் 6ல் 1966-ல் திறக்கப்பட்டது - ஏப்ரல் 25 பாலம் என்பது போர்ச்சுகல் நாட்டின் லிஸ்பன் நகரில் டேகஸ் (Tagus) ஆற்றின் குறுக்கே அமைந்துள்ளது. 3323 அடி நீளம்
• வரலாற்றுப் பெயர்: தொடக்கத்தில் இது 'சலாசார் பாலம்' என அழைக்கப்பட்டு பின்னர் 1974 கார்னேஷன் புரட்சியை நினைவுகூரும் வகையில் பெயர் மாற்றப்பட்டது.
• அளவு: இதன் மொத்த நீளம் சுமார் 2.27 கி.மீ ஆகும்
• திறக்கப்பட்ட ஆண்டு: ஆகஸ்ட் 6 1966
• மொத்த நீளம்: 2இ277 மீட்டர்கள் (மத்திய இடைவெளி 1 013 மீட்டர்கள்)
• அமைவு முறை: மேல் தளம் கார்களுக்கும் கீழ் தளம் ரயில்களுக்கும் பயன்படுத்தப்படுகிறது. இரு - அடுக்கு அமைப்பு.

• பெயர்க்காரணம்: தொடக்கத்தில் இது 'சலாசார் பாலம்' என அழைக்கப்பட்டது. பின்னர் 1974 ஆம் ஆண்டு ஏப்ரல் 25 புரட்சிக்குப் பிறகு தற்போதைய பெயர் பெற்றது.
--------
18-8-2026






திங்கள், 17 ஆகஸ்ட், 2026

614 (1113) Balasingham Anchaly....

 

        

      அன்புள்ள சின்னமாமா!... இறுதியாக உங்களை

அணைத்து முத்தமிட்ட போது இது இறுதியோ என்று தான் நினைத்தேன்.
உங்கள் ஆத்மா சாந்தியடையட்டும்.
மாமியும் பவன் குமாரும் அமைதியடையட்,டும்
ஓம் சாந்தி!..சாந்தி! 16-8-2026










சனி, 15 ஆகஸ்ட், 2026

613 (1112) UUdakam---sydny radio (Thuukkam)

 

   


 https://www.facebook.com/sownthary.sivananthan/videos/2905487243133888

சௌந்தரி கணேசன் Sydny radio
கருப்பொருள் - துாக்கம்
உலகக் கவிஞர்களின் கவிதைகள்
--------
தூக்கம் (சிட்னி வானொலிக் கவிதை)
00
அலை வந்து அணைப்பதாக
தொலைதூரப் பயணமாக
விலயில்லா அமைதியாக
தலையணைத் தோழி இணைவாள்.
00
நித்திரை ஊஞ்சலில் அமர்ந்தால்
நிம்மதிக் காற்றில் பிணைந்து
நிறைந்து நனையும் ஈரக்காற்று
துறைமுகமாகும் மயக்கநிலை.
00
ஒருவகை ஒத்திசைவான உயிரொடுக்கமோ!
உறங்குவது போலும் சாக்காடு
உறங்கி விழிப்பதாக பிறப்பு
உரைக்கிறார் திருவள்ளுவர்.
00
சிப்பியில் முத்து உறங்கும்
தப்பிடாத எமது பிடியில்
சொப்பனமற்ற தூக்கம்
ஒப்புவமையற்ற கொடை.
00
முத்துமாரி கோவில்மணியும் சேவலும்
புத்திளம் காலையைச் சொல்லும்.
மொத்தமாய் உறக்கம் கலைக்கிறது.
பறக்கிறது உடல் மூளைஓய்வு நிலை.
00
வேதா. இலங்காதிலகம்.- தென்மார்க்- 13-8-2026
Reply
Vetha Langathilakam
·
எப்போது பொழுது சாயும்
அப்படியே என்னை மறந்து
ஒப்பந்த மின்றித் தூங்கிட... 15-8-2026




செவ்வாய், 11 ஆகஸ்ட், 2026

612 (1111) போர்த்துக்கல். 8வது பயணம் - 6





   

     போர்த்துக்கல். 8வது பயணம் - 6

சாவோ ஜார்ஜ் கோட்டை (Castelo de São Jorge) என்பது
போர்ச்சுகல் தலைநகர் லிஸ்பனின் மிக உயர்ந்த மலையின் உச்சியில் அமைந்துள்ள ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க நடுத்தர காலக் கோட்டையாகும். லிஸ்பன் நகரின் மிக முதன்மையான அடையாளங்களில் ஒன்றான இக்கோட்டை பல நூற்றாண்டுகால போர்ச்சுகீசிய வரலாற்றைத் தன்னுள் கொண்டுள்ளது. ....

• பண்டைய காலம் (கி.மு. 8 ஆம் நூற்றாண்டு) இந்த மலைப்பகுதியில் ஃபீனீசியர்கள்- கார்தீஜினியர்கள்- ரோமானியர்கள் மற்றும் விசிகோத்துகள் போன்ற பல பண்டைய நாகரிக மக்கள் அரண்களை அமைத்து வாழ்ந்துள்ளனர்.

• மூர்கள் ஆட்சிக்காலம் (கி.பி. 10 - 11 ஆம் நூற்றாண்டு) வட ஆப்பிரிக்க இஸ்லாமியர்களான மூர்கள் (Moors) இப்பகுதியைக் கைப்பற்றி லிஸ்பன் நகரைப் பாதுகாப்பதற்காக ஒரு வலுவான கோட்டையாக இதை மாற்றினர்.

அரச அரண்மனை (13 - 16 ஆம் நூற்றாண்டு) - லிஸ்பன் நாட்டின் தலைநகரமாக மாறிய பிறகு இக்கோட்டை மன்னர்களின் அதிகாரப்பூர்வ அரச அரண்மனையாக (Paço Real) மாற்றப்பட்டுப் பயன்படுத்தப்பட்டது. சுதந்திரமாக உலவும் மயில்கள் -
இக்கோட்டை வளாகத்தில் உள்ள பூங்கா மற்றும் மரங்கள் நிறைந்த பகுதிகளில் பல அழகான மயில்கள் சுதந்திரமாக உலா வருவதைக் காணலாம். சுமார் 40-க்கும் மேற்பட்ட இந்திய மயில்கள் சுதந்திரமாகத் திரிகின்றன. இந்த அழகான பறவைகள் கோட்டைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளை மிகவும் கவர்கின்றன. வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த இடத்தில் பழமையான சுவர்களிலும் மரங்களிலும் மயில்கள் தோகை விரித்து நடமாடுவதைக் காண முடியும்.

பேரப் பிள்ளைகளும் மகனும் கோட்டைக்கு மேலே ஏறினார்கள். நானும் இவரும் கீழே இருந்து பார்த்துக் கொண்டிருந்தோம். படம் எடுத்தோம். படத்தில் அம்புக் குறி இட்ட இடத்திற்கு 3 பேரும் ஏறினார்கள். நான் எடுத்த படம்.
----------------------------------------

11-8-2026 

             


சனி, 8 ஆகஸ்ட், 2026

611 (1110) UUDAKAM - CIDNY RADIO - porumai

 

 

   



   https://www.facebook.com/sownthary.sivananthan/videos/1088365783724650

சௌந்தரி கணேசன்
கவிதை பேசும் நேரம்
உலகக் கவிஞர்களின் கவிதைகள்
சிட்னி வானொலி 2026-8-6
வேதாவின் கவிதை முதலாவதாக வருகிறது.

கவிதைத் தலைப்பு
பொறுமை.
00
துன்பத்தில் உணர்வை அடக்கல்
கோபம் கொள்ளாமல் இருத்தல்
தீபமேற்றும் வாழ்வில் பொறுமை.
00
பூமிக்கு மட்டுமல்ல பொறுத்தல்
பூரண வானுக்கும் சொத்தே
பூமியை ஆள்வர் பொறுமையாளராம்.
00
துன்பநிலை தானாய் நெருங்காது
துக்கசாகரம் பொறுமை இழப்பே
தியானம் பொறுமையை வளர்க்கும்
00
நாம் தூங்க ஆன்மதவம்
நல் ஞானம் தூங்குவதால்
தர்மநெறி நீறுபூப்பதால் அமைதி அவியும்.
00
அறிவியலின் தாய் பொறுமை
கடலினும் பெரியது – மனநோய்
உடல் நோய்களை அழித்திடும்
00
பாதகச் சூழ்நிலையில் திறமையான
நிர்வாகப் பொறுமை மனஆரோக்கிய
நெருங்கிய உணர்ச்சித் தாங்கல் கவனமானது
சக்தியுடையது காத்திருக்கப் பொறுமை தேவை
00
வேதா. இலங்காதிலகம்-தென்மார்க்- 2-7-2026






வெள்ளி, 7 ஆகஸ்ட், 2026

610 (1109) போர்த்துக்கல். 8வது பயணம் - 5



 போர்த்துக்கல். 8வது பயணம் - 5

Jeronomos Monastry– யெறோனிமஸ் மடாலயம்.
மிகப் பெரிய தேவாலயம். உள்ளே போக நீண்ட வரிசை நாங்கள் போகவில்லை. அதைவிட திருத்த வேலைகள் நடந்தபடி இருந்தது. திரைகள் போட்டு மறைத்தபடி இருந்தது. ஆனால் கண்பறிக்கும் சிற்ப வேலைப்பாடுகள்.
போர்த்துகல் நாட்டின் தலைநகரான லிஸ்பன் நகரில் உள்ள பெலெம் பகுதியில் அமைந்திருக்கும் யெறோனிமஸ் மடாலயம் (Jerónimos Monastery ) 1500-களில் கட்டப்பட்ட அழகிய வரலாற்றுச் சின்னமாகும். இது போர்த்துக்கீசிய மானுவெலின் கட்டடக் கலைக்குச் சிறந்த எடுத்துக்காட்டாகும். 1983-ம் ஆண்டு யுனெஸ்கோ இதை உலகப் பாரம்பரிய சின்னமாக அறிவித்தது. இதைக் கட்டிமுடிக்க 100 வருடங்கள் எடுத்தது. செழுமையான கடல்கள் வரலாற்றுக்குச் சான்றானது. அதிசய அழகு - ஒரு அழியாத அடையாளம். பல்வேறு கலைப்பணி மற்றும் தாக்கங்களை மூச்சடைக்கக் கூடிய தலைசிறந்த படைப்பாகக் கலக்குகிறது. கடந்த கால நேர்த்தியான கைவினைத் திறன் மிளிருகிறது.
• கடலோடி வாஸ்கோட காமா இந்தியாவுக்குப் பயணம் மேற்கொள்ளப் புறப்பட்ட இடத்திற்கு அருகில் இது உள்ளது.
• புகழ்பெற்ற மாலுமி வாஸ்கோட காமாவின் உடல் இங்குள்ள தேவாலயத்தில் அடக்கம் செய்யப்பட்டுள்ளது.
• இது அழகிய தூண்கள் பிரம்மாண்டமான கல் வேலைப்பாடுகள் மற்றும் அமைதியான வராண்டாக்களைக் கொண்டுள்ளது.

திரைகள் போட்டு மூடியதால் படம் எடுக்க முடியாதென ஆதங்கப்பட்டேன். எவை எவைகளைப் பார்க்க வேண்டுமென பட்டியல் போட்டு வெற்றியிடம் காட்டினேன் அவர் தான் சகல ஏற்பாடுகளும் செய்தார். அவரை நாங்கள் யூனியர் வஸ்கொடகாமா என்று பகிடிவிட்டோம். நன்றி சொன்னோம். 

எங்கள் அறை யன்னலூடான காட்சி........


      


செவ்வாய், 4 ஆகஸ்ட், 2026

609 (1108) போர்த்துக்கல். 8வது பயணம் -4

 

       போர்த்துக்கல். 8வது பயணம் -4

Portugal, Lisbon. Belem horse statues in the park near the Discoveries Monument - போர்ச்சுகல் தலைநகர் லிஸ்பனின் மையப்பகுதியில் உள்ள பிராகா டா குயிரே (Praça da Figueira) சதுக்கத்தில் இந்த கம்பீரமான சிலை அமைந்துள்ளது. முதலாம் டோம் ஜோவோ (Dom João I) போர்ச்சுகல் வரலாற்றில் மிக முக்கியமான மற்றும் மக்களால் பெரிதும் மதிக்கப்பட்ட ஒரு பேரரசர் ஆவார். இவரைப் பற்றிய கூடுதல் சுவாரசியமான வரலாற்றுத் தகவல்கள் இதோ:
👑 அவிஸ் வம்சத்தின் நிறுவனர்
• ஆட்சிக்காலம்: இவர் 1385 முதல் 1433 வரை சுமார் 48 ஆண்டுகள் போர்ச்சுகலை ஆட்சி செய்தார். போர்ச்சுகல் வரலாற்றிலேயே மிக நீண்ட காலம் ஆட்சி புரிந்த மன்னர் இவரே ஆவார்.
அவர் 'அவிஸ் வம்சத்தின்' (House of Aviz) நிறுவனரும் போர்ச்சுகலின் 10-வது மன்னரும் ஆவார். 1385-ல் நடந்த வரலாற்றுச் சிறப்புமிக்க 'அல்ஜுபரோட்டா போரில்' battle of Aljubarrota) காஸ்டில் (ஸ்பெயின்) படைகளை வீழ்த்தி போர்ச்சுகலின் சுதந்திரத்தைப் பாதுகாத்தவர்.. இவரது ஆட்சிக்காலத்தில்தான் போர்ச்சுகலின் உலகளாவிய பயணங்களும் புதிய நாடுகளைக் கண்டறியும் பொற்காலமும் தொடங்கின. ...
16 ஆம் நூற்றாண்டில் இந்த இடத்தில் சதுக்கம் ஏதும் இருக்கவில்லை. இப்பகுதியின் பெரும்பான்மையான இடத்தில் 'அனைத்து புனிதர்களின் அரச மருத்துவமனை' (Hospital Real de Todos os Santos) அமைந்திருந்தது.
1755 ஆம் ஆண்டு லிஸ்பன் நகரை உலுக்கிய பயங்கர நிலநடுக்கம் மற்றும் அதைத் தொடர்ந்து ஏற்பட்ட சுனாமி தீ விபத்துகளால் இந்த பிரம்மாண்ட மருத்துவமனை கட்டிடம் கடுமையாகச் சேதமடைந்தது.
மருத்துவமனை இடிக்கப்பட்ட பிறகு நகரின் முக்கிய வியாபாரிகள் இங்கு கூடி காய்கறிகள் பழங்கள் விற்கும் சந்தையாக மாற்றினர். இங்கு முன்பு இருந்த ஒரு பெரிய அத்தி மரத்தின் நினைவாகவே இதற்கு 'பிராகா டா குயிரே' (அத்தி மரச் சதுக்கம்) என்று பெயர் வந்தது.
• இவரது ஆட்சிக்காலத்தில்தான் போர்ச்சுகலின் புகழ்பெற்ற கடல் கடந்த உலகக் கண்டுபிடிப்புகளும் ஆக்கிரமிப்புகளும் தொடங்கின.
• மகன் ஹென்றி: உலக வரைபடங்களை மாற்றியமைத்த புகழ்பெற்ற மாலுமியான 'ஹென்றி தி நேவிகேட்டர்' ((Henry the Navigator)) இவருடைய மகன் ஆவார்.

4-8-2026. vetha. langathilakam..Denmark...







ஞாயிறு, 2 ஆகஸ்ட், 2026

608 (1107) போர்த்துக்கல். 8வது பயணம் -3

 

   போர்த்துக்கல். 8வது பயணம் -3

கண்டுபிடிப்புகளுக்கான நினைவுச்சின்னம் என்பது போர்ச்சுகல் நாட்டின் லிஸ்பன் நகரில் உள்ள டாகஸ் நதிக்கரையில் அமைந்துள்ள புகழ்பெற்ற Padrão dos Descobrimentos (Monument to the Discoveries) ஆகும்.
• இடம்: பெலெம்( Belam) லிஸ்பன் போர்ச்சுகல்.
• உயரம்: 52 மீட்டர்கள் (170 அடி) உயரம் கொண்டது.
• வரலாறு: 15 மற்றும் 16-ஆம் நூற்றாண்டுகளில் போர்ச்சுகீசிய மாலுமிகளின் கடல்வழி கண்டுபிடிப்புகளைச் சிறப்பிக்க 1940-ல் உருவாக்கப்பட்டு ஹென்றி தி நேவிகேட்டர் (Henry the Navigator) நினைவாக 1960-ல் நிரந்தரமாக மீண்டும் கட்டப்பட்டது.
• வடிவமைப்பு: கடலை நோக்கிச் செல்லும் ஒரு பெரிய கப்பல் (Caravel) வடிவில் அமைக்கப்பட்டுள்ளது. இதில் வாஸ்கோட காமா- பெர்ட்ரோ அல்பிரெஸ் கப்ரால் போன்ற புகழ்பெற்ற மாலுமிகள் மற்றும் வரலாற்றாசிரியர்களின் சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன.
சிறப்பம்சங்கள்: 56 அடி உயரக் கப்பல் வடிவமைப்பு இளவரசர் ஹென்றியின் உருவம் மற்றும் 32 வரலாற்று மாலுமி சிலைகள். ((பெலெம் பகுதிஇ டாகஸ் நதிக்கரை).)
---------------------------
இது 1514 மற்றும் 1519 ஆண்டுகளுக்கு இடையில் கட்டப்பட்டு
'மானுடைன்' ((Manueline) பாணியில் வெள்ளை நிறக் கற்களால் உருவாக்கப்பட்டது.
போர்ச்சுகீசிய மாலுமிகள் கடல் பயணங்களைத் தொடங்கவும் லிஸ்பன் நகரைப் பாதுகாக்கவுமான கோட்டையாகப் பயன்பட்டது. ( காவற் கோபுரமாக)
டேகஸ் (Tagus) ஆற்றின் கரையில் அமைந்துள்ளது. யுனெஸ்கோ அமைப்பு 1983 ஆம் ஆண்டு இதனைப் பாரம்பரியச் சின்னமாக அறிவித்தது
இணையத் தகவல்கள்
- வேதா. இலங்காதிலகம்- தென்மார்க் 2-8-2026.








649 (1149) photo poem -5

       5.       photo  poem