சனி, 22 ஆகஸ்ட், 2026

616 (1115) UUdakam....சாட்சி -- (சிட்னி வானொலி

 


       


    https://www.facebook.com/sownthary.sivananthan/videos/1039867808796569

சாட்சி --
(சிட்னி வானொலிக்கு கவிதை)

சாட்சியில் சிறந்தது மனச்சாட்சி
காட்சியை உள்ளபடி உரைத்தல்
மாட்சியாகிறது. அநீதியின்
நீட்சி பொய்சாட்சியாகிறது.
00
ஆதாரமான அத்தாட்சியே சாட்சி.
கம்பர் புலமையில் பொறாமையானார்
ஒட்டக் கூத்தர். துமி என்ற
சொல்லிற்குச் சாட்சி கேட்டார்.
00
பாவிக்காத சொல்லுக்குச் சாட்சி
மனம் வருந்திக் கலைவாணியிடம் கம்பர்
வேண்டினார். அடுத்தநாள் கூத்தருடன் உலா
சென்றார். ஒரு பெண் நான்கு குழந்தைகள்.
00
தயிர் கடைந்ததாய்...குழந்தைகளே!
சற்றுத் தூரமாக விளையாடுங்கள்
நான் கடையும் தயிரின் துமி
உங்கள் மேல் சிதறும் என்றாள்.
00
ஒட்டக்கூத்தர் இச்சொற்பாவனையைக்
கேட்டு தான் தோற்றதை உணர்ந்தார்.
தான் எழுதிய இராமாயணத்தை எரித்தார்.
கம்பனே ஓடிப்போய் கூத்தரின்
உத்தர காண்டத்தையாவது காப்பாற்று
என அசரீரி கேட்டது.
00
ஓடோடி ஒட்டக்கூத்தர் இல்லம் வந்து
நெருப்பையணைத்தார்.உத்தரகாண்டம் தப்பியது.
கூத்தரே ராமபட்டாபிசேகத்துடன் என்இராமாயணம்
நிறைவுபெறுகிறது. உத்தரகாண்டத்தை எழுதுமாட்டேன்.
உங்களதே உலகில் நிலைபெறும் என்றார்.
00
கலைவாணி பெண்ணாகி நான்கு
வேதங்களும் குழந்தைகளாகி ஒட்டக்கூத்தருக்குச்
சரஸ்வதி சாட்சியாகி கூத்தரின் பொறாமையை எரித்தாள்.
00.
வேதா. இலங்காதிலகம் - தென்மார்க் - 21-8-2026
பிரசுரித்த திகதி - 22-8-2026



1 கருத்து:

649 (1149) photo poem -5

       5.       photo  poem