ஞாயிறு, 3 ஆகஸ்ட், 2025

495 (1037) (ஊடகம்) தமிழ் நெஞ்சம் கவிதை- அடுக்குமல்லி

 

    தமிழ் நெஞ்சம்  மாதஇதழ்  - ஆவணி 2019ம் ஆண்டு

இதழுக்கு எழுதி பிரசுரமான கவிதை



        


அடுக்குமல்லி தொடுத்து வச்சேன்

00

ஆசையா நேசமா அன்பை நெறச்சு 

ஆனந்தமா ஒங்களுக்கா பூவு பறிச்சு

அடுக்குமல்லி தொடுத்து வச்சேன்

இடுக்கிலே எங்கே ஒளியுறீங்க மாமா

00

வடக்கிலே புசல் (புயல்)காத்தாம் மாமா

வாங்க வேலைக்குப்போக வேணாம்

படுக்கைக்குப் போகும் வரை என்னோடிருங்க

பருப்புக்கறி சோறு பொங்கித் தாரேன் மாமா

00

தொடுத்து வைச்ச மாலையைச் சூட்டிவிடுங்க

தொகை தொகையாய் பேசிக் கொண்டாடுவோம்

தோப்புக்குப் போயி இளநீ குடிப்போம்

தோடை மரமும் காய்ச்சுக் குலுங்கியிருக்கு

00

ஆவணிக்குத் தானே கண்ணாலம் மாமா

அது வரை பேசிக் கலந்திருப்போமே

அப்பாரும் ஏதும் சொல்லார் வந்திடுங்க

ஆத்தாவுக்கு நானு சொல்லிக்கிறேன் மாமா

00

வராட்டா நானு வதங்கிடுவேன் மாமா

வரும்போது மறக்காம முறுக்கோடு வாங்க

வாசக் கதவோரம் வச்ச கண்ணுமாறாம

வாரப்பாடாய்ப் பாத்திருப்பேன் என்னாசை மாமாவே!

00

பா வானதி வேதா. இலங்காதிலகம்.  தென்மார்க். 2019 ஆவணி


       



 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

568 (1068) sanrithal - (பெண்மை) யாதுமாகி நின்றவள் பெண்ணே!

                 (பெண்மை)    யாதுமாகி நின்றவள் பெண்ணே!   - ( தேன்தமிழ்க் கவிவனம். சர்வதேச மகளிர்தினச் சிறப்புப் பேட்டி.) 00 (குமைதலின்றி – ...