செவ்வாய், 26 ஆகஸ்ட், 2025

503 (1045) (ஊடகம்) - வாழ்வுத் தேர்வு

 

         (ஊடகம்)    -உறவு இந்தியச் சிற்றிதழில் மாசி - 2006ல்  11ம் பக்கத்தில் பிரசுரமானது.

  


       


வாழ்வுத் தேர்வு


அரிக்கும் ஆசைத் தீயால் எரிக்கும் பிழையான தேர்வில்

சிரித்துச் சுகிக்கும் வாழ்வை மரிக்கச் செய்யும் ஆர்வம்

செரிக்கும் உணவைத் தள்ளி கரிக்கும் உணவைக் கொள்ளல்.

00

ஆனந்தச் சிற்றோடை வாழ்வை அனர்த்தமாக்கும் அமைதியை

ஆதாயம் கருதித் தள்ளல் அவசர வாழ்வை அள்ளல்

ஆகாரமிருக்க மனிதம் ஆகாயம் பார்க்கும் எத்தனம்

00

அழைத்தும் வராத விருந்தினராய் நுழையாத நிம்மதி தொலைவில்

பாசியில் வழுக்கும் நிம்மதி ஊசியில் நுழையாத நூலாய்

யாசிப்பில் யார் பெறுவார் பேசினால் உறுதியாய்ப் பெறலாம்

00

நெற்றியை வழித்து நிமிரும் கற்றை ஆசுவாசம் அமுதம்

சற்றுக் கண்ணை மூடிடும் சொற்ப நிம்மதி சொர்க்கம்

அற்புத அமைதிக் காலத்திற்கு கற்பக தருவாகும்தேர்வு.

00

கவிசாகரம்  வேதா. இலங்காதிலகம்.  தென்மார்க்.  மாசி 2006



              



          



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

602 (1102) பெட்டகோ பட்டம்!

                நான் 1990 ல் இருந்து 1993 வரை படித்த செமினாறியக் கட்டிடம் இடித்து தொடர் மாடியாகக் கட்டி பலர் குடியிருக்கின்றனர். வாகனத்தில் ...