கறள் பிடித்த உணர்வு
கறள் பிடித்த உணர்வு
00
( துறத்தல் - கை விடுதல்- நீங்குதல்.)
00
மறதி மாபெரும் கெட்ட நோய்
கறள் பிடித்த உணர்வு தான்.
இறப்பின் நினைவு சிறப்பற்ற துயர்.
00
துறத்தலானது ஒரு தங்க மாலை
அறம் புறமாகத் தேடத் தேட
உறங்கலானது எண்ணம் அது எங்கே!
00
யாரும் மாலையைத் திருட வாய்ப்பில்லை
ஊகம் குப்பையோடு குப்பை ஆனதா!
யோகம் இல்லையா அது தொலைந்ததா!
00
தூக்கம் அற்ற சிந்தனை ஓட்டம்
ஊக்கமுடன் தியானமும் துணையாக ஒட்டியது
ஊரிலொரு புது மாலை வாங்கினேன்
00
பழையதை விற்றது ஒளியாகத் தோன்றியது
தழைத்தது மகிழ்வு தொலைக்கவில்லை மாலையை
பழைய நினைவு தரும்பியது புதுமை!
00
திருடன் மாலையைத் திருடவில்லை நினைவுத்
திருடன் ஒளிந்திருந்து வந்தது திகைப்பு!
தித்திக்கும் தெளிவு! நிம்மதி திரிசுடரானது!
00
வேதா. இலங்காதிலகம் - தென்மார்க் 6-1-2025
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக