439 - பிரபலம் - கவிதை
மறைமலை அடிகள்
தனித்தமிழ் இயக்கம் தொடங்கி
தமிழைச் செழுமையாய் வளர்த்தார்.
தமிழறிஞர் ஆய்வாளர் வடமொழி
கலப்பற்ற தூயதமிழில் தமிழெழுதியவர்.
00
கடவுள் - சமயப் பற்றுருவாக்க
சைவப்பணி சொற்பொழிவு ஆக்கினார்.
இயற் பெயர் வேதாசலம்.
திருக்கழுக்குன்றத்தார் மறைமலையென்று பெயராக்கினார்.
00
நான்காம் வகுப்புவரை படித்தார்.
தந்தையிறக்க தமிழ் புலவர்
நாராயணசாமி பிள்ளையிடம் தமிழ்கற்றார்.
பேராசிரியர் ஆகப் பணியாற்றினார்.
00
ஐம்பத்திநான்கு நூல்கள் எழுதினார்.
பல்லாவரத்தில் இருந்த வீடு
மறைமலை அடிகள் நூலகமாக
தமிழக அரசு பராமரிக்கிறது.
00
சொக்கநாதபிள்ளை சின்னமடையார் தவப்புதல்வன்.
1876 ஆடி 15ல் பிறந்தார்.
தமிழ்கடல் - பல்லாவரம் முனிவர்
தனித்தமிழின் தந்தையெனவும் அழைக்கப்பட்டார்.
00
வேதா. இலங்காதிலகம். – தென்மார்க். –19- 1-2025
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக