திங்கள், 30 ஜூன், 2025

484 (1026) கடன்காரா!

 

         



  


கடன்காரா!


கடன்காரனாக வாழ்வதிலும்

கடமை செய்பவனாக வாழலாம்.

கடப்பாட்டாளனாக வாழலாம்.

(கடமையறிந்து அதைச் செய்பவன்.)

கடன்காரா!    கடன்காரா ! 

கடனை முழுவதுமாகத் திருப்பிக் கொடுத்தால்

பெரும் மதிப்பிற்குரியவன் நீயே

கடன்காரா!   சிலுவை ஆணிகள் தடம் போடுவது கம்பீரமா!

30-6-2025




      





வெள்ளி, 27 ஜூன், 2025

483 (1025) ஏழாவது பயண விவரணம் - வேல்ஸ்

 


      ஏழாவது பயண விவரணம்


  ஆறு பயணக் கட்டுரைகள்  வேதாவின் வலை ஒன்றில் எழுதியுள்ளேன்.   இது ஏழாவது பயண விவரணம்.   Lavanniyas vedio down....மகள் லாவண்யாவின் ஒளிப்பதிவு கீழே உள்ளது.


வேல்ஸ் பயணம். 17-6-2025

        


17-6-2025 லிருந்து ஐந்து நாட்கள் இங்கிலாந்து வேல்ஸ் ல் நின்று  பின்னர்  இவரின் சகோதரர்களுடனும் நின்று 26-6-25 தென்மார்க் வந்தோம். 4 நாட்கள் நல்ல  கோடை நாட்களாகவும் கடைசி நாள்   மழை காற்றாகவும் வேல்ஸ் ல்  இருந்தது  .அவுஸ்திரியா - சுவிஸ் போல மலை   நாடாகவும் வேல்ஸ் இருந்தது. மகளின் இருக்கையறை - மாடிப்படி  - படுக்கையறை  சன்னல் காட்சிகள் எல்லாம் ஒவ்வொரு புத்தகம் போல அழகு கொட்டி  இருந்தது.  
                               

 
நமது நகரம் ஓகுஸ் ல் இருந்து தலை நகர் கொப்பென்கேகனுக்கு விமானம் ஏறி - அங்கிருந்து மன்செஸ்டர் நகருக்கு விமானம் எடுத்தோம்.
 மன்செஸ்ரர்  நகரம் வடக்கு இங்கிலாந்தின் தலைநகரம் என விளங்கும் பெரிய நகரம். 452 000 பேர் வசிக்கின்றனராம்.  அங்கிருந்து   ஸ்நோடோனியா பாக்

            


 எனும் மகள் வசிக்கும் வடக்கு வேல்ஸ் - க்கு  2 மணிநேர   பயணம்  டாக்சியில் சென்றோம். மலைகளுக்கு ஊடான பயணம்.
வேல்ஸ்  ஐக்கிய இராச்சிய ஆளுகைக்கு உட்பட்ட நாடு. கிழக்கே இங்கிலாந்தும் மேற்கில் அட்லாண்டிக் பெருங்கடலும் ஐரியக் கடலும் உள்ளது. 3 மில்லியன் மக்கள் தொகையாம்.  ஆங்கிலமும் வேல்ஸ் மொழியும் அதிகாரத்தில் உள்ளது. தெருவோரம் - வீட்டு எல்லை  மதில்கள் அனைத்தும் கற்களால் கட்டப் பட்டது அழகிய காட்சி.  --     முதலாவது படத்தில்  இந்தக் கல்லு மதிலைக் காணலாம்
ஆங்கிலத்தில் பெயர்ப் பலகைகளை வாசித்தேன். இல்லையம்மா இது உச்சரிப்பு  வேல்ஸ் மொழியால் ஆனது என்று சொன்னார்கள் - மிக வித்தியாசம்.
யுகே யில்  உயரமான மலை பென் நெவிஸ் (ben nevis  ) ஸ்கொட்லாண்டில் உள்ளது. கடல் மட்டத்திலிருந்து 1345 மீட்டர் உயரம். யுகே யில் 2வது உயர மலை ஸ்நோ டோன் -   வேல்ஸ் ல் உள்ளது 1085 மீட்டர் உயரம். 3560 அடி. இங்கு பல காலமாக புகையிரதத்தில்         

               

       


   மலை உச்சிக்கு சுற்றுலா செல்லலாம். நாங்களும் சென்றோம்.   ஸ்னோடன் மலை ரயில்வே முதன்முதலில் 1896 இல் திறக்கப்பட்டது, இது 2025 இல் 129 ஆண்டுகள் பழமையானது. இது அதிகாரப்பூர்வமாக ஈஸ்டர் திங்கட்கிழமை, ஏப்ரல் 6, 1896 அன்று திறக்கப்பட்டது.   
மலை உச்சியில் திசைகாட்டி கட்டியுள்னர். இதை குதிரைச் சப்பாத்து என்று ஆங்கிலத்தில் சொல்வார்கள்.
 
         

  மலை உச்சியில் நாங்கள்.
 
       




      

  அழகிய இடம் காலநிலை கோடையாக இருந்ததால். உச்சியில் அன்று  26 பாகை வெப்பம் கீழே 32 பாகை.

   

திங்கள், 16 ஜூன், 2025

482 (1024) இயற்கை – 1 - பவளப்பாறைகள்

 

           


       



           இயற்கை எனும் தலைப்பில் வேதாவின் வலை  1ல் 78 கவிதைகளும் 

வேதாவின் வலை 2ல் 94 கவிதைகளும் வலையேற்றியுள்ளேன். இனி இயற்கை தலைப்பில் கோவைக் கோதை புளோஸ்பொட்.கொம் ல் ஒன்றிலிருந்து ஆரம்பிக்கின்றேன்.


இயற்கை – 1 - பவளப்பாறைகள்

00

(கடல்உயிரிகள் வாழ்ந்து முடிந்த எச்சங்கள்

வாழ்ந்துகொண்டிருக்கும் சேர்க்கைகளும் பவளப்பாறைத் திட்டுகள்)

00

ஆழ் கடலின்  நெஞ்சாங்கூட்டில்

சூழ் வண்ணப் பவளப்பாறை பவளத்திட்டு

வாழ்கின்ற பல உயிரினங்களின் சரணாலயம்

தாழ்வில்லா உயர்நிலை ஓவியக்கூடம்

ஆழ்கடலுயிர்களின் வாழ்வாதாரம் பவளப்பாறை.

00

எண்ணிடாதீர்கள்!  இது பாறை இனமல்ல!

கண்பறிக்கும் நகரமுடியாத விலங்கினம்

நுண்ணிய பவளம் உயிரினமே பாறை உருவாக்கிகள்

சுண்ணாம்புக் கற்களாலான முதுகெலும்பற்ற உயிரினம் (பாலிப்)

விண்ணிலிருந்தும் பார்த்து வியக்கலாம்.

00

உள்ளெடுக்கிறது  பவளஉயிரி கடல்நீரில் கல்சியம் (சுண்ணம்)

தள்ளுகிறது வெளியே கல்சியம் காபனேட்டாக

பள்ளத்தில் பவளப் பூச்சிகளின் இனம் உயிரி லார்வாக்கள்

மௌ;ளக் கற்பாறைகளில் ஒட்டிய வளர்ச்சி

பாலிப் எனும் மெல்லுடலிவகை பவளப்பூச்சியாகிறது

00

படர்ந்த பல வண்ணக் கம்பளமாக 

இடம்பமான மொசைக் தரையாக வண்ண

கடலடித் தோட்டமாகப் பல இலட்சம் ஆண்டு

தொடர் நிகழ்வாகப் பவளப்பாறைப் பாசியினங்கள்

வாழ்ந்து மடிந்து பவளப் பாறையாகிறது.

00

உல்லாசப் பயணிகள் உள்ளம் கவர்வது

எல்லாம் மறக்கச் செய்யும் பவளஉயிரிகளின்

நில்லாத  பலவண்ணப்  பவளப்பாறை நடனங்கள்

எல்லாமாக இவ்வாற்றல் தருவது பாசிகளே!

சொல்கிறார் சார்லஸ் டார்வின் இது - அணைந்த எரிமலைத் தீவாம் -

00

கவிச்சாகரம் - வேதா இலங்காதிலகம் - தென்மார்க் - 16-6-2025






புதன், 4 ஜூன், 2025

481 (1023) கவிதைப் பள்ளு – 3

 

        


      


              கவிதைப் பள்ளு – 3


என் கவிதையை ஒருநாளேனும்

ஏன் ஆராயவில்லை நீ!

நாலு  வரி எழுதினாலும் 

மேலும் ஒரு விருது!!

00

மொழியெனும் வாகனத்தில் நிதம்

கழிபடர் (மிகுந்த துயர்) இன்றி உயிர்

செழிப்புடன் செல்லும் பயணமிது.

பழிப்பற்ற பவித்திரப் பாதையிது.

00

இயல்பான  இலக்கியமான வாழ்வை

அயர்ச்சி அலுப்பின்றி அலசலாம்

சுயநலமின்றிப் பொதுநல வழியில்

தயக்கமின்றி இன்னலற்று வாழலாம்.

00

அழிவில்லாக் கவிதைப் பள்ளு

அழிமதி (கெடுமதி) இன்றி உலகிற்கு

எழிலாகப்  பக்குவமாய் பாழானவை

ஒழிய வரிகள் செதுக்கலாம்

00

ஆராய்ந்து ஆராதனம் (சிந்தித்து) செய்து

ஏராளம் சொற்கள் தேடி

ஓராங்கு( ஒருசேர)பொருந்த இணைத்து

சாராம்சமாகத் தருவதே பனுவல்

00

கவிஞர் திலகம்  வேதா. இலங்காதிலகம்  தென்மார்க். 4-6-2025


                     




                               

ஞாயிறு, 1 ஜூன், 2025

480 (1022) தனக்கு இன்பமானால்....

 

        


         

  

           தனக்கு இன்பமானால்....


கன்னியாய் கண்ட முகம்

கருவுற்ற கற்பனை முகம்

உரு மாற்றம் ஒரு 

திருவுரு தெய்வ சித்தம்.

கள்ளம் கபடமற்ற மனம்

கருவுற்ற பிள்ளைக்கு ஆரோக்கியம்

00

சாத்தான் வேதம் ஓதுவதாக

ஊத்தை உபதேசங்கள் உதிர்த்து

பூத்திடும் மலரான உறவுகளை

பாத்தி கட்டி ஒதுக்குதல்

பூத்த மலரைப் பிடுங்குதல்

பூரிப்பு அல்ல எதிர்மறையே!

00

மனதைக் கலைத்து உறவு

மனநிலையைக் குளப்புதல் ஒரு

வினய மிகு(கொடுஞ்செயல் -வஞ்சம்) செயலே

தனக்கு இன்பமானால் தன் 

வனப்பு உதர சிசுவும்

வளம் பெற்று வளரும்.

00

கவித் திலகம்  வேதா. இலங்காதிலகம்.   தென்மார்க். 1-6-2025






568 (1068) sanrithal - (பெண்மை) யாதுமாகி நின்றவள் பெண்ணே!

                 (பெண்மை)    யாதுமாகி நின்றவள் பெண்ணே!   - ( தேன்தமிழ்க் கவிவனம். சர்வதேச மகளிர்தினச் சிறப்புப் பேட்டி.) 00 (குமைதலின்றி – ...