செவ்வாய், 8 ஜனவரி, 2019

10 (599) மதமல்ல இது மனிதம்.






மதமல்ல இது மனிதம்.

மதம் வேறானாலும் இதமுடைய மனிதம்.
கதமின்றிக் கந்தவேளும் இஸ்லாம் அக்பரும்
ததம் (அகலம்) அன்பென்று முத்திடும் நிலைமை.
நிதமனைவரும் நிசமாயிப்படி வாழ்தல் சொர்க்கம்.

கொலை,   களவு, பொய் மதுவின்றி
வலையெனும் நீதிநெறி தருமம் உண்மையுள்
குலையாது மதமென்ன மார்க்கமென்னவென
நிலையூன்றுவது வேறுபாடற்ற ஒரு பாதையே!

சலாம்.   இசுலாம்,   சாந்தி,   அமைதி.
படைத்த வல்லமை இறைக்குக் கட்டுப்படுதல்.
இந்துவானவர் கடவுளையிதயத்தால் நெருங்குவோர்
இறையையறிவார்,   நம்மாற் காணவியலாதவரெவரும்
கண்டதுமில்லையென்கிறது உபநிடதம். 


 3-5-2017




1 கருத்து:

  1. அருள் பி ஜி:---- அருமை சகோ
    4 May at 09:41- 2018
    Vetha Langathilakam :----அருள் பி ஜி மிக்க மகிழ்ச்சி பகிர்விற்கு.
    மனம் நிறைந்த நன்றி உறவே
    4 May at 10:13:-2018

    Vetha Langathilakam Nasmin Nazar:- வாழ்த்துக்கள் சகோ
    · 4 May at 17:26-2018
    :-
    Vetha Langathilakam Nasmin Nazar மிக்க மகிழ்ச்சி பகிர்விற்கு.
    · 4 May at 17:28
    2018

    Subajini Sriranjan :- அருமையான பா
    மனிதமே மதம்
    2018
    Vetha Langathilakam பகிர்தலுக்கு நன்றி.சுபா. மகிழ்ச்சி. இது
    படக்கவிதையே தான். எல்லோரும் ஒற்றுமை பற்றி எழுதும்
    போது நான் வித்தியாசமாக எழுதினேன்.
    இக்கவிக் கருத்தை மிக விரும்புகிறேன்.


    Sujatha Anton :- மதம் வேறானாலும் இதமுடைய மனிதம்.
    கதமின்றிக் கந்தவேளும் இஸ்லாம் அக்பரும்
    ததம் (அகலம்) அன்பென்று முத்திடும் நிலைமை.
    நிதமனைவரும் நிசமாயிப்படி வாழ்தல் சொர்க்கம்.
    நிறைந்த கருத்து மனிதன் நிலைக்க வேண்டும். வாழ்க தமிழ்.!!!!
    2018

    பதிலளிநீக்கு

428 (961) ஆலமர விழுதற்ற அவலநிலை மனிதக்காட்சிச் சாலை.

                       ஆலமர விழுதற்ற அவலநிலை மனிதக்காட்சிச் சாலை மிருகக் காட்சிச் சாலை மாறி மனிதரே மறந்த மனிதம் போனதால் மனிதக் காட்சிச் சாலை...