வெள்ளி, 1 மார்ச், 2019

37. (623) . கற்றது கையளவு






கற்றது  கையளவு

கற்றது எமது கையளவாம்.
கற்க வேண்டியது கடலளவே.
கற்றவர் கற்றபடி நடந்தால்
கற்பதில் வெகு அருத்தமுண்டு.

கற்றவன் கல்வி செல்லுமிடமெல்லாம்
கற்பூரம் போல் மணக்கும்.
கற்க கசடறக் கல்லென்றார் வள்ளுவர்.
கற்பக தருவாம் சிறந்த கல்வி

கற்பனா சக்தியும் கல்வியும்
அற்பமல்ல. மா கவிஞனாவான்.
கற்றிட வயதில்லை காலகாலமும்
கற்றிடலாம் கடல்கடந்து புகழடையலாம்.

கற்றோர்க்குச் செல்லுமிடமெங்கும் சிறப்பு.
கற்பதற்கின்று பணம் பெறும்
அற்ப கூட்டங்கள் மலிந்து
கற்றலென்பது ஏழையெட்டா நிலையானது.

கற்கக் கற்க ஆசை பெருகும்.
குற்றமற கற்கை நன்று.
கற்றல் கண்களிரண்டு போல்
நற்தவ வாழ்வில் பயன் தரும்.

 19.7-2016




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

435 (969) தோற்றால் வரும் ஏமாற்றம்

                          தோற்றால் வரும் ஏமாற்றம்   எதிர்பார்ப்பின் பரிசு ஏமாற்றம் எதிர்பார்க்காதவன் மகிழ்ச்சியாளன் ஏமாற்றம் உயர்விற்குப் பட...