வன்கொடுமைகளால் நிலம் நடுங்கும் ஊமைநிலை
வக்கிர புத்திக்காரன் அது
அக்கிரகாரமானாலும் அகில உலகமானாலும்
சக்கரமாக மனதைச் சுழலவிடுபவன்
அக்கறையற்ற மனக்கட்டுப்பாடு அற்றவன்
உக்கிரமான காமுகனும் ஆகிறான்.
காம அக்கினி (காமத்தீ) மிகுந்தவன்
காமதூரன், காமியர், காமி.
காமப்பேயாம் காமுகனின் காமவிடாய்
காட்டுத் தீ சூறாவளியாகும்.
காமநோய் காமப்பற்று காமப்பித்தாம்.
காமம் உடல் சார்ந்த
காட்டுத்தர்பார் காட்டுத்தனம்.
காதல் உளம் சார்ந்தது.
காமம் இருமனம் ஒத்தாலுயர்வு!
தீமுகமான பண்பாட்டுப் புரிதலற்றது.
பா வானதி வேதா. இலங்காதிலகம்
டென்மார்க் 12-3-2019
Rathy Mohan காமப்பிசாசுகள் அட்டகாசம் கொடுமை கொடுமை
பதிலளிநீக்கு2019
Vtha:- Mikka makilchchy Rathy