சனி, 28 ஆகஸ்ட், 2021

358. ( 921) ரோஜா முள்

 




ரோஜா முள்


சுந்தர வண்ண  இதழ்களால்

சுகந்த மணம் கொண்டு

மந்திரமாய் மனம் கவரும்

ரோஜாவைச் சுற்றியேன் முள் வந்தது!

பழகும் என்னருமைக் காதலியைச்

சுற்றும் அப்பாவைப் போலவா!


அழகிற்கு ஆபத்தும் இணைந்ததை

அழகாய் அருத்தமாய்க் காட்டுகிறதோ!


முட்கள் ரோஜாவிற்குக் காவலானால்

முள்ளில்லா மலர்களுக்கெது காவல்!

காவலில்லா மலர்களுக்கும் ஒரு கம்பீரம் உண்டல்லவோ!


குருவியும் ரோஜா முள்ளிற்குள்

ஒரு கூடு கட்டாது

தோட்டத்து விதைப்  பாத்திகளைக்

கோழி கிளறாது பாதுகாக்கும்

ரோஜாமுள் கவட்டைகள் நல்ல

காவலராகப் பாத்திமேல்  வலையாகும்.

 

(சிஐரிவியில்  கவிதையே தெரியுமா நிகழ்வில்  30-6-2006-ல்

என்னால் வாசிக்கப்பட்டது.)-------


28-8-2021





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

602 (1102) பெட்டகோ பட்டம்!

                நான் 1990 ல் இருந்து 1993 வரை படித்த செமினாறியக் கட்டிடம் இடித்து தொடர் மாடியாகக் கட்டி பலர் குடியிருக்கின்றனர். வாகனத்தில் ...