புதன், 7 மே, 2025

470 (1013) கவிதைப் பள்ளு - 1

 


              



       



   

      மிக்க மனமார்ந்த நன்றி ஞானம் இதழுக்கு.

       கவிதைப் பள்ளு - 1


எடுத்து வாசிக்க மனமில்லாமல் சமையல்

அடுப்போடு போராடும்பலருக்குக் கவிதையேன்!

அடுத்து அடுத்து எழுதிக் குவித்தாலும்

படுத்துச் சாய்ந்து கட்டிலே கதியாகிறார்

வீட்டிலே சோர்ந்து இருக்காது சிலர்

பாட்டிலே வரிவரியாய் எமுதிக் குவிக்கிறார்.

00

கருத்துடை வரிகளை அழகாக எழுதி

உருத்துடன் பெறுமதி நூலாக்குகிறார்

நெஞ்சில் முட்டி மோதும் உணர்வை

கொஞ்சு தமிழில் கோர்த்து மீட்கிறார்.

அஞ்சாது போட்டிகளில் எழுதிக் குவித்து

அருத்தமுள்ள விருதுகள் அளவின்றிப் பெறுகிறார்.

00

எங்கும் நூல்களைப் பரப்பி  விதைக்கிறார்

எடுப்பார் இல்லையெனில் இலவசமாய் விதைக்கிறார்.

கருத்து மலைகள் உயராவிடினும் முயற்சியால்

விருப்போடு நற்கருத்துகள் பொங்குகிறது

கருத்துகள் மளமளவெனத் தளிர் விடுகிறது

குறுஞ் சிரிப்புடன் கவித்தளிரிற்கு உரமிடுகிறார்.

00

கவி  நறுமணத்தில் உயர்ப்புறும் சவடுகள்

கடந்து போவதில்லை மனது நிறையும்.

கங்கு கரையின்றிக் கடலாகப் பொங்கும் 

கடவுள் தந்த வாழ்வுப் புத்தகத்தில்

மொழியால் கவிப்பள்ளு வரைகிறேன்

அழியாத மடிப்புகளாய் மிதக்கும் சிறகுகளாய்.


கவியருவி - வேதா. இலங்காதிலகம். - தென்மார்க் -7.5.2025

In GNANAM      ITHAL.--

           


             


                   POEM:-        

                       

  

         மிக்க மனமார்ந்த நன்றி ஞானம் இதழுக்கு.





3 கருத்துகள்:

  1. Sarvi Kathirithambi
    கவிவரிகளில் எண்ணச் சிதறல்
    ...அருமை...வேதாஅக்கா
    18-10-2025
    Vetha Langathilakam
    Sarvi Kathirithambi Mikka nanry Sarvi

    பதிலளிநீக்கு
  2. Vetha Langathilakam
    மொழி ஒரு சிறந்த சாதனம். (கருவி) ஆயுதம் -கவசம்
    தொடர்பு - அணிகலன் என்று பலவாறாகக் கொள்ளலாம்.
    மொழியைத் திறமையாகக் கையாள வேண்டும். பிழையின்றி
    எழுத வேண்டும். மொழியின் இயல்பை உணர்ந்து
    இலக்கணப்படிகவனமாக முயற்சித்து எழுத வேண்டும்.
    17-10-2025
    Sarvi Kathirithambi
    மொழியில்லா நகர்வு ...சுத்த சூனியம்...சிந்திக்க சிந்திக்க சிந்தனையும் பேரூற்றாகும்+
    மொழியினூடாகவே இதனை
    பெருக்காக்கிட முடியும்....18-10-2025

    பதிலளிநீக்கு

568 (1068) sanrithal - (பெண்மை) யாதுமாகி நின்றவள் பெண்ணே!

                 (பெண்மை)    யாதுமாகி நின்றவள் பெண்ணே!   - ( தேன்தமிழ்க் கவிவனம். சர்வதேச மகளிர்தினச் சிறப்புப் பேட்டி.) 00 (குமைதலின்றி – ...