இயற்கை தலைப்பில் - வேதாவின் வலை 1 ல் 78 கவிதைகளும்
வேதாவின் வலை 2 ல் 95 -கவிதைகளும்
பதிந்துள்ளேன். இனி ஒன்றிலிருந்து ஆரம்பம் இந்த வலையில்
இந்த இணையத்தில். 2
மழை....
00
படபட சடசடவென
பெட்டியில் விழுவது போல்
தகரத்தில் விழுவது போல்
குட்டிக் கற்கள் எறிவது போல்
00
அதிகாலை ஆறமணிக்கு
மழைத்தூற்றல் வலுத்தது.
என்தூக்கத்திலும் கல்லெறிதல்
சத்தத்தை ரசித்தபடி போர்வைக்குள்
00
டொக் டொக் என்று மழை
பெருமித வரங்கள் இவை
கவிதை நர்த்தனம் தானே!
காற்றின் மீதொரு நடனம் தானே!
00
இலைக்காடும் நீர்க்காடுமான
மழையின் கதையை ரசிக்க
யார் கூறுவார்! ஆதிமாந்தனும்
தோணி ஓட்டியகதையை...
00
கோவை பாரதி- வேதா. இலங்காதிலகம். தென்மார்க் 29-1-2026



















