ஞாயிறு, 18 ஜனவரி, 2026

551 (1071) நிவேதனம் என்பது அன்பு

 

    

        



        



     நிவேதனம் என்பது அன்பு

00

எங்கள் ஊருக்கு வந்தும்

என்னோடு ஒரு சொல்

எங்ஙனம் பேசாமல் இருந்தாய்!

எடுத்தெறிதலாக எனக்கு இருந்தது.

00 

என்று வருவாய் நீ

எங்கு தங்குவாய் என்பதும்

எனக்குத் தெரியாதே! மௌன 

நாடகமாகத் தான் இருந்தது.

00

முந்தி வந்த செவியை

பிந்தி வந்த கொம்பு

மறைப்பது உண்மை போல

கறை படர்ந்த நடவடிக்கை

00

நேச நெய்யை மறைத்தது

நியாயப் படுத்தாத துரோகம்

அன்பை உதறிய காரணம்

தன்னிலை விளக்கமுண்டோ!

00

நிலைகுலைய வைக்கும் நிராகரிப்பு

நிறைய வைக்காது அன்பை

நின்மல அன்பை எதிர்பார்த்தேன்!

நினைப்பு நொருங்கியது துன்பம்

00

நிறையழிதல் நேசப் பிரிவு

நிறைகுடமென நினைப்பது பொய்யோ!

நிவேதனம் என்பது அன்பு

நிலையாமையின்றி அள்ளிக் கொடு!

00

கவிமணி – வேதா. இலங்காதிலகம் -தென்மார்க் -18-1-2026



          



3 கருத்துகள்:

568 (1068) sanrithal - (பெண்மை) யாதுமாகி நின்றவள் பெண்ணே!

                 (பெண்மை)    யாதுமாகி நின்றவள் பெண்ணே!   - ( தேன்தமிழ்க் கவிவனம். சர்வதேச மகளிர்தினச் சிறப்புப் பேட்டி.) 00 (குமைதலின்றி – ...