சான்றிதழ்க் கவிதை
கரிசல் கலை இலக்கிய மன்றம்.
தலைப்பு --- ஓரப்பார்வையால் என்னைச் சாய்க்காதே
00
சொல் விளக்கம் (வாரம் வைத்தல் - விருப்பப் படுதல்)
00
வாரம் வைத்து வசமாக நினைக்கிறேன்
ஆரபி பாடியே ஆசையை ஏய்க்காதே!
ஓரப்பார்வையால் என்னைச் சாய்க்காதே!
தாரகை நீயே தலைவியாய் வருவாயா!
00
காதவிடுக்கில் ஒளிந்து நின்று பார்க்கும்
கைவிரல்கள் முந்தானை முடிச்சிடும்
கால் விரல்கள் மண்ணில் கோலமிடும்
காதல் சாலமா! வெட்கமிதா பெண்ணே!
00
வெட்கச் சிவப்புக் கன்னம் உன்
கட்டழகில் சொலிக்குதே! உட்கருத்து என்ன!
இட்டமுடன் யான் நோக்க மண்ணையும்
சட்டென நோக்காவிடில் என்னையும் நோக்குகிறாயே!
00
முத்தமிழ் தாரகை - வேதா. இலங்காதிலகம் - தென்மார்க் , 18-2-2023


Vetha Langathilakam
பதிலளிநீக்குNanry jeya a polikai.....10-6-26