Posts
·
Shared with Public
Vetha Langathilakam
சௌந்தரி கணேசன் - அவுஸ்திரேலிய வானொலிக் கவிதை
00
வார்த்தைகளை உயர்த்துங்கள் குரலையல்ல.!!!!
00
வார்த்தைகள் வளமிகு நதி
ஆர்த்திடும் குரலில் ஆக்ரோசம்
வார்த்தல் வளம் அல்ல
தேர்ந்த வார்த்தை தெய்வீகம்
00
பேசப்படும் வார்த்தைகள் என்றும்
வீசப்படும் கல்லாக வேண்டாம்.
பாசமுடை சொல் செல்வாக்கு
நேசமுடை சொல் வீரியமுடைத்து
00
கனிந்த மொழி அன்புப் பாலம்
காய் போன்ற மொழியேன்!
தீய்தலான மொழியில் தினம்
தோய்வது வாழ்விற்குத் தோல்வி
00
நல்ல சூழலில் நாளும்
உல்லாசிப்பவன் உமிழும் மொழி
உயரியது. அவன் உயர்நிலையாளன்!
உயிர்த்தணையாளனாக்கலாம் அவனை!
00
ஒரு சொல் கொல்லும்
ஒரு சொல் வெல்லும் என்பார்கள்
அருமையான மனப் போக்குடைய
பெருமை மிகு மானுடராவோம் - நாம்!
00
வேதா. இலங்காதிலகம்.- தென்மார்க்- 12-6-2026


Vetha Langathilakam
பதிலளிநீக்குThank you Arumugam mahenthy...13-6-2026
Vetha Langathilakam
பதிலளிநீக்குThank you vasanth VJ.......13-6-26
Vetha Langathilakam
பதிலளிநீக்குTharma Naga
Happy Well Done GIF by Lucas and Friends by RV AppStudios
photo wish...congrats
Vetha Langathilakam
Tharma Naga ..thank you...(chennai muthamil sangam)...13-6-2026