உறவுகளால் கணவனை ஒதுக்கலாமா!
00
மழலைப் பாக்கியம் தந்த
மகசூல் கருப்பையின் விந்தின்
மகப் பேறின் தந்தையானவன்
மகனுக்கு யார்! பிரம ரகசியமா!
00
பிள்ளையில்லை என்ற பெயரைப்
புரட்டிய விந்திற்குச் சொந்தக்காரன்
பாக்கியம் பெற்றது கணவனால்
பாசமின்றி ஒதுக்கும் அலையா!
00
பிள்ளையெனும் பிரதிமை உருவானது
பிரத்தியட்சமாய்க் கையில் இருப்பது
பிரசித்தம் தந்தை யல்லவா!
பொல்லா வினையறுக்கக் கொல்கிறானா!
00
வல்ல குருநாதனின் வதைப்பா!
நல்ல குடும்பம் நலிவதா!
நகைமுக உறவுகள் கூடவருமா!
நந்தாவிளக்கு கணவனல்லவா!
00
கவியருவி -வேதா.இலங்காதிலகம்-11-7-2026

Vetha Langathilakam
பதிலளிநீக்குSre Sivanathen! mikka nanry makilchchy....(kavithai charanalayam)...11-7-2026