ஞாயிறு, 1 டிசம்பர், 2019

226. (794 ) மனதை வெள்ளை அடிக்கலாம்.






மனதை  வெள்ளை அடிக்கலாம்.

அன்பென்ன அன்பு! அலட்சியம் செய்திடு!
பண்பென்ன பண்பு! பணத்தைக் கையிலெடு!
இன்பத்தின் துணயைத் துறைமுகம் எட்டியதும்
துண்டித்துவிட்டுத் துச்சமாய் எண்ணலாம்.

குன்றில் ஏறிக் குவலயத்தில் நிமிர்ந்திடல்
என்றும் மாமனிதன் கொள்கையாக்கலாம்.
நன்று நல்வழி தைரியமாயச் செல்வதற்கு.
நன்றி என்பது வைரவர் வாகனத்திற்கு.

செப்பிய உண்மை வாழ்வில் ஈனம்
தப்பான பண்பிது அழிவின் பாதை.
உப்பிட்டு நாம் உணவு உண்கிறொம்
' சப் ' பெனும்  இவ் வாழ்வைத் தடுத்தல் தர்மம்.

உரியவன்  வாழ்வைச் சுரண்ட எண்ணுதல்
எரிந்ததில்  மீதியை எடுத்திட எண்ணுதல்
அரிய மனிதத்தின் கரிய பகுதியாம்
பெரிய மனசோடு வெள்ளை அடிக்கலாம்.

 8-5-2004

( தமிழ் விசை.கொம் இணையத்தளத்தில்  பிரசுரமானது.
இலண்டன் ரைம் வானொலியில் வியாழன் கவிதையில் திரு. அதிபர் நடாமோகன் வாசித்தார்.)




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

435 (969) தோற்றால் வரும் ஏமாற்றம்

                          தோற்றால் வரும் ஏமாற்றம்   எதிர்பார்ப்பின் பரிசு ஏமாற்றம் எதிர்பார்க்காதவன் மகிழ்ச்சியாளன் ஏமாற்றம் உயர்விற்குப் பட...