மதம்... மதம்
சித்தார்த்தனின் சிலைகளுக்குக் கீழ்
சிரிக்கின்ற செந்தாமரையே நீ
சித்திரிக்ப்பட்டாயா புத்த மதத்திற்காய்!
தேவனின் ஆலய வாசலில்
தேவாராதனை கூறும் அலரிமலர்களே
தேவன் இயேவுக்காய்ப் படைக்கப்பட்டீர்களா!
மதம் ஒரு சிறையா!
கதம் அழித்து மாந்தரை
பதமாக்கும் நற் பாதையன்றோ!
கெட்டவன் விழுந்து விழுந்து
கொட்டுகிறான் பணம், வணக்கத்தை
வெட்டாமல் தீயதையேன் வளர்க்கிறது!
மதம் ஒரு நடிப்பாகிறது
மனிதன் மதத்தையும் ஆயுதமாக்கி
புனிதமற்ற நடிப்பாகிறது.
இவன் என்று திருந்துவது!
நலமுடை உலகு எழுவதற்கு!
28-12-2019


நல வெண் பா :- சித்தார்த்தனின் காதல்
பதிலளிநீக்குபுத்தனின் ஞானம்
கவிதைகளில்
6-1-2020
Vetha Langathilakam:- OH! makilchchy...