மனமார்ந்த நன்றி ஜீவநதி குழுவினருக்கு
கீழடி
சங்ககாலச் சம அடியெனும்
தொல்லியல் அகழாய்வு அடி
தமிழனும் சங்ககாலமுமான தொடர்படி
சிவகங்கை மாவட்டக் கீழடி
தமிழனின் பெருமித அடி.
இரண்டாயிரத்து அறுநூறு ஆண்டடிக்கு
முன்னானது தமிழ் எழுத்தடியென
அறியப்பட்டஉண்மை ஆய்வடி
இரண்டாயிரத்து இருநூறு வருடவடி
பழமையானதென்ற நிரூபண நிசவடி.
ஆய்வு தமிழனுக்கு மேலடியே
முழுஉலகும் வியந்த அடி
முன்னோர் கதை சொல்லுமடி
பாண்டிய நாணயங்களாம்இ வணிக
ஆதாரம் ரோமானியர்களுடனாம்
சங்கஇலக்கியம் கற்பனை என்றதை
நொறுக்குமொரு நகரநாகரீகம்கண்டனர்.
சாதி மத குறியீடுஇ தாலி இல்லை.
ஆயுதம் தாங்கிய உருவமில்லை
தாய்த் தெய்வ வழிபாடே ஊகம்.
பண்புடை வைகைக் கரை நாகரீகமடி
மண்ணுக்குள் பாண்டியநாடு தாய்மடி
கண்முன்னேயான ஆவண சாட்சியடி
யூப்பிரட்டீஸ் ரைகிறீஸ் காலம் கடந்தோர்.
சங்ககால வசிப்பிடம் கீழடி
3-10-2019.
Vetha Langathilakam :- சஞ்சிகையில் கவிதை வருவது பெருமை தானே!
பதிலளிநீக்குஉண்மையல்லவா!
Vetha Langathilakam :- என் கை எழுதிய பனுவல்களுக்கு
உன் மனக் கருத்துகள் மாறுகொள்வேன்!
Subajini Sriranjan:- வாழ்த்துகள்
11-12-2019
Vetha Langathilakam :- அன்புடன் மகிழ்ச்சி சுபா
சஞ்சிகைகள் தாங்கி வந்த கவிதைக்கு வாழ்த்துகள்.
பதிலளிநீக்கு