1.செயலாய் நான்
(துயங்குதல் - சோர்தல். தியாலம் - காலம்
புயலாய் இல்லாவிடிலும் செயலாயென் வினைகள்
அயலாரைப் பேணுதல,; அன்பாய் உறவாடுதல்,
இயலாதவருக்கு உதவுதல், இன்பமாய்ப் பேசுதல்,
தயங்காது கைகொடுக்கும் செயலராய் நான்.
செயலோடு இன்றி உரையாக எழுதியும்
பயனுறு சிறு பாவென கட்டுரையாய்
துயங்குதலின்றி தியாலம் கருதித் தூவுகிறேன்
நியமம் இதுவென்று நிசமான செயலில்.
குழந்தைகள் பேணல் கூடிக் குலவுதல்
வழக்கமாய்க் கொள்ளும் பழக்கமாய் என்றும்
முழக்கமிடுதல் இன்றி முழுவதுமாய் இயங்குவேன்.
உழவு போன்று தான் இதுவும்.
கழகம் அமைக்காது கழலுதலற்ற செயலிவை.
கிழமை தோறும் மூன்று நாட்கள்
மழலை போல மனம் மகிழும்
சுழலுதலான இலவச சமூகசேவை இது.
--------------
2. செயலாய் நான்....
(விமலன் - குற்மற்றவன்)
கல்வி கொடுத்தல் கண் கொடுத்தல்
வல்வினை என்று வளமாய்த் தொடர்ந்தேன்.
கல்லும் கனிய காதலாய் பிள்ளைச்
செல்வங்களோடு கலாச்சாரம் செழிக்கவும் பாடுபட்டேன்
இல்லையென்னாது அன்பை இயல்பாய்க் கொடுப்பதால்
தொல்லையற்ற உலகு தொழிற்படும் என்று
மெல்லக் கூறி மெய்யுணர்த்தி வன்மை
பொல்லாமையென மனதில் பொன்னில் பொதிப்பேன்.
சமத்துவம் எழுப்பி, சகலரும் சமமென்று
தமக்குள் உணர்வது தன்மையாம் மனிதநேயமென்றும்,
அமரத்துவம் பெற்றோருக்கு அன்பு செலுத்துதல்,
இமயத்திற்கு உயர்த்தும் இழிந்தோருக்கு உதவுதல்
எமது கடனென உணர்த்துவேன் செயலில்.
கமக்காரன் உலகின் கரு என்பேன்
நிமலனையெண்ணி மமதை நீக்கி கண்ணியமாய்
விமரிசனமில்லாச் செயலாய் விமலனாய் நான்.
22-1.2019
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக