சனி, 7 டிசம்பர், 2019
228. (796 ) ஞானம் சஞ்சிகையில் ---------- கீழடி
இலங்கை ஞானம் மாத சஞ்சிகையில் எனது கீழடி பற்றிய கவிதை
மனமார்ந்த நன்றி ஞானம் குழுவினருக்கு.
கீழடி அகழ்வாய்வு -
கீழடியின் தாய்மடி குமரிக்கண்டமாம்.
கீழடி குமரிக்கண்ட மதுரையாம்.
வைகைநதி சுமந்து சென்ற
வைர இரகசியங்கள் இதுவோ!
தமிழ் வரலாற்றின் நங்கூரம்
அமிழ்ந்திடாத நன்னம்பிக்கை முனை
இரண்டாயிரத்து அறுநூறு ஆண்டு
பழைமையான கீழடி நாகரீகமோ!
முழுமை நாகரீக வாழ்வினாதாரம்
யானைத்தந்தச் சீப்பு, தாயக்கட்டை
அணிகலன்கள், ஆதிச்சநல்லூர், அரிக்கமேடு
காவிரிப்பூம் பட்டினத்திலும் ஆய்வு பெருமளவில்.
பானைகளில் பிராமிய எழுத்து
ஆதன், முயன், வேந்தன்
பெயர்கள், வணிகம், தொழில்நுட்பம்
கலாச்சாரம் ஓங்கி இருந்தமை
அறுபது விளையாட்டுப் பொருட்கள்
பேரினத்தின் ஆய்வுப் பேரொளி
நகரநாகரீக ஆதார அடி
ஆயிரத்து ஐந்நூறு தொல்பொருட்கள்
தலைநிமிரச் சொன்னது தமிழனை.
மொகஞ்சதரோ ஹரப்பா சிந்துவெளிக்கு
முந்தியவர்கள் வாழ்ந்த ஆதாரங்கள்.
மூவாயிரம் ஆண்டுக்கால நாகரீகம்.
3-10-2019
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
568 (1068) sanrithal - (பெண்மை) யாதுமாகி நின்றவள் பெண்ணே!
(பெண்மை) யாதுமாகி நின்றவள் பெண்ணே! - ( தேன்தமிழ்க் கவிவனம். சர்வதேச மகளிர்தினச் சிறப்புப் பேட்டி.) 00 (குமைதலின்றி – ...
-
2020 சார்வரி --(வீறியெழல்) ஆண்டு காலமெனும் மந்திரவாதியின் கோல் சுழன்று அசைந்தது. காட்சியானது புதிய ஆண்டு காற்றில் கரைகிறது ...
-
இரட்டைக்கிளவி கலகல காட்சியில் திமு திமுவென மழலைகள் சுறுசுறுப்பாக ஓடுவதேன்! சுளீர் சுளீரெனும் வெயிலில் மளமளவெனப் பொற...
-
https://youtu.be/S9DOv8gB5Yo நிலாமுற்ற குழுமத்தின் டென்மார்க் கவியரங்கத்தில் பாடிய கவிதை . வழி மாறிய பயணங்கள் இல்லத்தரசியாக ...

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக