திங்கள், 2 டிசம்பர், 2019

227. (795 ) வாசிப்பு. கற்பனை- அறிவு (தியானம்).....








வாசிப்பு. கற்பனை- அறிவு (தியானம்).....

கண்ணால் பார்க்கும் மரம் அழகு
கண்ணால்   பார்க்க முடியாதது   வேர்களாக
எண்ணத்தில்  சில   நூல்கள்(வரிகள்) புரியாது
கண்ணால்    காணாத   வேர்கள் போல

வாரம் ஒரு  முறை தவறாது 
வாசிகசாலையில் புத்தகங்கள் எடுத்து
வாரப்பாடாய் வாசித்து மகிழ்வார் சிலர்.
வாசிப்பு வாசனை வேண்டாம் என்பார் சிலர்.

புத்தகமும் ஒரு ஆவணம் தான்
எத்தகைமை வாழ்வென வாழ்பவன் மனிதன்.
இத்தகைமை   என்று   வாழாதது விலங்குகள்.
புத்தகம் வாசித்தல் நல்ல கலை

நற்குணங்களை  நம்முள் விதைப்பது நூல்கள்.
அற்புத உணர்வுடன் இன்பமீவது நூலகம்
தன்னம்பிக்கை வாசிப்பால் பெருகுவது நிச்சயம்.
வாசிப்பும் ஒரு வகைத்   தியானமே.

 2-12-2019








5 கருத்துகள்:

  1. Kugananthaluxmy Ganesan:- உண்மை. வாசிப்பும் உயர்ந்த தியானமே. வாசிப்பின் மகத்துவம் பற்றி அழகாக தெளிவாக தந்தீர்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக மகிழ்வும் ஆழ்ந்த அன்பும் உரித்தாகுக. சகோதரி

      நீக்கு
  2. Rama Sampanthan
    Vetha Langathilakam அருமையான
    வரிகள் ! வாழ்த்துகள்
    3-10-2021

    பதிலளிநீக்கு

435 (969) தோற்றால் வரும் ஏமாற்றம்

                          தோற்றால் வரும் ஏமாற்றம்   எதிர்பார்ப்பின் பரிசு ஏமாற்றம் எதிர்பார்க்காதவன் மகிழ்ச்சியாளன் ஏமாற்றம் உயர்விற்குப் பட...