இலக்கியத்தின் அரசி கவிதையால்
கலைக்கொரு தாலாட்டு.
கலை என்பது இனத்தின் அடையாளம்
நிலைவாழ்வின் எச்சம்
கலையொரு வெளிப்பாடு
உள்ளுணர்வின் சுதந்திரம்.
கலைகள் பண்பாட்டு ரீதியாக
பண்பாடு கடந்த ஓரழகிய மொழி.
இயந்திரமாய் இயங்கும் வாழ்வில் ஓர்
இதமான இயக்கம் கலை. உடலின்றி
இதயமும் இங்கிதமாய்க் கலக்கும் வேட்கை.
இன்னுமின்னும் என்று மனதை இயக்கும்.
வல்லமையின் உயிர் கலை நுட்பம்
நல்ல கற்பனையின் உள் எழுச்சி.
பல்லின விலங்கியலற்ற மானுட வேறுபாடு.
வெல்லும் அகன்ற வரையறை கொண்டது.
பதினேழாம் நூற்றாண்டு வரை கலை
பயனுடை திறமை அறிவியல் நுட்பக் கணிப்பாயிருந்தது.
பின்னாக அழகியல்இ கற்பனை திறமை
பயனுறு கலை – நுண்கலைகளாகவும் பகுக்கப்பட்டது.
கலையும் பல சமுதாயத் தாக்கம் தாங்கியது.
சிற்பமோவியம்இ ஒளிப்படம்இ கட்புலக் கலையாகவும்
சொற்பொழிவுஇ நடனம்இ நாடகமிசை தற்காப்புக் கலையாகவும்
அரங்காடல் கலையாகவும்இ கதைஇ கவிதைஇ கட்டுரை
நாடகவியல் எழுத்துக் கலையாகவும் உள்ளது.
இன்று ஊடகக் கலை நவீனமென்றுள்ளது.
அன்று ஆயகலைகள் அறுபத்துனான்கு என்றனர்.
நன்றான கலைவரலாறு கற்காலம் தொடங்கி
உலகின் பல நாகரீகங்கள் கலைவரலாறு உள்ளடங்கியதே.
சரித்திரச் சித்திரங்களிற்கு
கலைகள் சிறந்த ஆதாரம்.
தூரநோக்கக் கண்ணாடியுமாகிறது.
இதை இப்படிச் சிறிதாகச்
சொல்லி முடிக்க முடியாது.
கலை பெருங்கடல்.
கவி வித்தகி - வேதா. இலங்காதிலகம்.
(இலங்கை) டென்மார்க் 24-5-2018
Kannadasan Subbiah :- அருமை சகோதரி
பதிலளிநீக்கு22-12-2019
Vetha Langathilakam :- நெருக்கமான அன்பு டன் மிக மகிழ்வு சகோதரா
Subi Narendran :- கலை பெருங்கடல், அதை மிக அழகாக கவிதை வரிகள் சொல்கிறது.
பதிலளிநீக்கு21-12-2019
Vetha Langathilakam :- நெருக்கமான அன்பு டன் மிக மகிழ்வு சகோதரி.
கருத்து ஊக்கமும் ஆக்கமும் தருகிறது
பதிலளிநீக்குநல வெண் பா :- உங்கள் சொல்லாடலில் தடுக்கி உங்கள் கவிக்குள் விழுந்து விட்டேன்.இன்னொரு கவி எழுதி எழுப்பி விடுங்கள்
7-1-2020