மூன்றாவது இன்பவியல்.
மனதிலே மகிழ்ச்சியை அடைதல்
அம் மகிழ்ச்சி பொருளாலும் உறவினர்
நண்பினராலும் பெறப்படுவதால் இது பொருட்பாலில்
நட்பியலுக்குப் பின் வைக்கப் பட்டது.
6. நாலடியார் 25ம் அதிகாரம் அறிவுடைமை.
பராஅரைப் புன்னை படுகடற்றண் சேர்ப்ப
ஒராஅலு மொட்டலுஞ் செய்பவோ நல்ல
மரூஉச்செய்தி யார்மட்டுந் தங்கு மனத்தார்
விராஅஅய்ச் செய்யாமை நன்று.
பருஅரை – பருத்த அரையுடைய புன்னை – புன்னை மரங்கள்
படு – பொருந்தின யார் மாட்டும்-எத்தகையாரிடத்தும். நல்ல மரூஉசெய்து-மிகுந்த நட்பினைப் பாராட்டி. ஒராஅலும்- பின்னர் மனம் வேறுபட்டுப் பிரிதலும். செய்பவோ- செய்வார்களோ. விராஅஅய் செய்யாமை-ஆராயாது கலந்து நட்புக் கொள்ளாதிருத்தலே.
எனது வரிகள்:-
பரந்த அரைகொண்டு அணைந்த
புன்னை மரங்களின் கடற் துறையாளனே!
நல்ல குணம் கொண்ட மனதாளர்
எவரிடத்தும் நல்ல நட்பு பாராட்டி
பின் மனம் மாறிப் பிரிதலும்
மறுபடி சேர்தலுமாக நடப்பார்களோ! ஆராயாது
கலந்து நட்புக் கொள்ளாதிருத்தலே நன்மையானது.
வேதா. இலங்காதிலகம்.தென்மார்க் 12-10-2025
-----------------------------



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக