வெள்ளி, 5 டிசம்பர், 2025

544 (1064) uudakam - நந்தவனம் - சாதிககும் பெண்கள்

 

  

       


             


  நந்தவனம் - சாதிககும் பெண்கள் சிறப்பிதழில் என் கவிதை:-

பெண்மை வெல்க! வாழ்க!
00
10பெண்ணியலார் பல கோணத்தில்
கண்ணாகிறார் வாழும் வாழ்விற்கு.
கணையாகச் சொற்கள் வீசி
அன்புச் சாரல் வீசாது
பெண்ணுயிர்க்கு இன்னா செய்வார்
தன்னுயிர்க்கு இன்னா செய்வாராவார்.
00
திகதி பங்குனி எட்டென்று
வீதிதோறும் பூசனை வேண்டாம்!
நீதியைப் பேணுங்கள்! உங்களில்
பாதியாய்ப் பெண்ணை எண்ணுங்கள்!
ஆதியுமந்தமுமாய் உயிர் கொடுப்பாள்
அன்றேல் சோகாத்தலேன்!... பெண்ணிழுக்குப்பட்டு!
00
பெண்கள் தினமெனப் பலர்
பண்கள் நிறையப் பாடுகிறார்!
கண்கள் என்றும் வாழ்த்துகிறார்!
பெண்கள் தினத்திலும் மேலாக
உங்கள் அடிமையாக இன்றி
பேணுங்கள் அவளைத் தோழியாக!
00
அன்பு அறிவு திமிர் பெண்மை.
அருள் அழகு அடங்காத்தனம் பெண்மை
அகங்காரம் ஆணவம் அகல்விளக்கு பெண்மை.
அடக்கியாளுதல் அடங்கிப்போதல் பெண்மை.
அழிப்பதும் ஆக்குவதும் ஆளுவதும் பெண்மை.
பெண்மை வெல்க வாழ்கவென்று கூத்திடுவோமடா!
00
கவி வித்தகர்- வேதா. இலங்காதிலகம்-தென்மார்க். 10-11-2025
----------------------








இங்கும் இது பிரசுரமானது..29th year.. nanthavanam
இதழிற்கு நன்றி....30-4-2026



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

588 (1088) மாயக் காலம்.

            மாயக் காலம். 00 (கேலம் -விளையாட்டு. சாலகம் - சிலந்திவலை. தாலம் -பனைமரம். நாலா - பள்ளத் தாக்கு.) 00 காலம் ஒரு நீண்ட கனவு ஆலம் ...