சனி, 20 ஜூன், 2026

596 (1096) uudakam - விநோதமானவர்கள்- ATBC radio Ausrealia

 

        https://www.facebook.com/sownthary.sivananthan/videos/996248023156887


   



Vetha Langathilakam
விநோதமானவர்கள்
00
கடிவாளமிட்டு நேர்கோட்டில் அடியெடுப்பவர்
படிக்கட்டுகளில் ஏறி இறங்குபவர்
முடிவற்ற சாதாரண பிறவிகள்.
அடர்வனத்தில் உலாவும் இயற்கைப்பிரியர்
குடிகளுக்கு நற்போதனையாளராம் திருவள்ளுவர்
துடிப்புடை கலைப்பாதைப் பயணிகள்
பிடிப்பான ஆன்மீகரான பிரசங்கிகள்
நெடிய பயண விநோதவாசிகள்.
00
விரக்தியற்ற வாழ்வுடன் இவர்கள்
கரடுமுரடற்ற பாதையில் வரலாறாகி
வரம்பற்ற இன்பம் அனுபவிப்பார்.;
வாய்ப்பைத் தானே ஏற்படுத்தும்
வல்லவர் வித்தியாசமானவர் வாதையற்றவர்.
மலையேறுவோர் - சிற்பி – ஓவியர்
நிலையானவர் கனவுகள் தொலைக்காதவர்
மாலை சூடிய அடையாளர்கள்.
00
இறப்பின் பின் அஸ்தியை
இறைப்பதில் வித்தியாச விரும்பிகள்.
உறைவிடத்துத் தஞ்சமின்றிப் பயணத்தில்
உலகைச் சுற்றும் விநோதர்கள்.
உற்சாகம் குறையாத உறுதியாளர்கள்
ஊன்றுகோலெனும் மனதைரியம் மனதிடம்
ஊன்றி உலகை வலமிடும்
உட்கருத்து அகப்பற்றுடையவர் ஆவர்.
00
கவிச்சுடர் - வேதா. இலங்காதிலகம்- தென்மார்க் -18-6-2026
posted on 20-6-2026




3 கருத்துகள்:

602 (1102) பெட்டகோ பட்டம்!

                நான் 1990 ல் இருந்து 1993 வரை படித்த செமினாறியக் கட்டிடம் இடித்து தொடர் மாடியாகக் கட்டி பலர் குடியிருக்கின்றனர். வாகனத்தில் ...