சனி, 27 ஜூன், 2026

599 (1099) uudakam ATBC radio .. கற்றுக் கொள்ளும் வாழ்க்கை.

 

  

   



   https://www.facebook.com/sownthary.sivananthan/videos/1007099895058837

கற்றுக் கொள்ளும் வாழ்க்கை. (ஏரிபிசி வானொலி- சௌந்தரி)
00
முற்றுப் பெறாத கற்றுக் கொள்ளும் வாழ்க்கை
முன்னாலே உள்ளது தன்னம்பிக்கையுடன் முன்னேறு!
முகிழும் அறிவு வாசித்தலில் - பயணத்தில்
முதிர்ச்சி அடையும்! வாய்ப்புகள் அதிகரிக்கும்
00
கேள்வி கேட்டுப் பதில் பெற்று
கற்கும் கதவை விரியத் திறக்கலாம்
கவலையில் மூழ்காது துணிந்து நட!
கங்குகரை யில்லாத கங்கையான வாழ்வு
00
வாழ்க்கை கரடுமுரடான சதுரங்கம் - பள்ளி
விழுந்தாலும் எழுந்து நீயே முன்னேறு!
வாழ்கையை நேசித்து ஆணவத்தைக் குறை!
வென்றிடுவாய்! அன்பை அணைத்து வாழ்!
00
தடைகளை உடைத்து குழந்தைக் கல்வியை
தளிர்க்கச் செய்! மன்னிக்கும் மனப்பாங்கு
தடுமாற்றமின்றி நடக்கச் செய்யும்.
தத்துவ வாழ்வை இறைவணக்கத்துடன் வெல்!
00
கற்க கசடறக் கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத் தக (குறள் - 391)

வேதா. இலங்காதிலகம்-தென்மார்க் - 25-6-2026
First poem Sowdary reading.





2 கருத்துகள்:

602 (1102) பெட்டகோ பட்டம்!

                நான் 1990 ல் இருந்து 1993 வரை படித்த செமினாறியக் கட்டிடம் இடித்து தொடர் மாடியாகக் கட்டி பலர் குடியிருக்கின்றனர். வாகனத்தில் ...