சொல் விதைக்க ஆசை மச்சான்.
நெல் விதைப்பது மட்டுமல்ல மச்சான்
பல் போகமுதல் எனக்கு மிச்சம்
சொல் விதைக்க ஆசை மச்சான்.
கல்வி இல்லாவிடிலும் காற்று வாக்கில்
நல்ல நாட்டுப் பாடல்கள் கேட்கிறோமே!
ஆச்சியிடம் சிறு பேச்சுக் கொடுத்து
மூச்சுக்கு மூச்சு பழமொழி கேட்டு
நீச்சல் அடிக்கணும் நூறு சொல்லுக்குள்ளே
வீச்சாகப் பொறுக்கியெடுத்து எங்க புள்ளைங்களுக்குக்
கூச்சமில்லாம சொல்லி விதைக்கோணும்
நெல்லு தடவிக்கிட்டு நீண்ட வரப்பினிலே
நெசமாலும் நாலு சொல்லு விசிறிக்கிட்டு
நடந்தாக்க புள்ளைங்க கேட்டுப்புட்டு
புதிசாகச் சொல்லிடுமே சொல்லு விதைப்பென்று.
நறுக்காகப் பாடினாக்க புரிஞ்சிடுமே சொல்லுமச்சான்.
ஆல் போலக்காதலெனக்கு உன்மேல தான்
வேல் போலவுன் கண்ணு சொருகுதென் மேலதான்
சொல் விதைக்கோணும் மச்சான்தமிழ் சொல்லு
வில்லுப்பாட்டு, நாட்டுப்பாட்டு, சொல்லுக்குச் சொல்லு
சொல்லோணும் என்னாசை மச்சான்.
17-2-2018
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக